அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 12

(அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 11 தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 12 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 – முனைவர் நா.இளங்கோ

(பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களைக் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற பெயரிலும் ‘மணிமேகலை வெண்பா’ என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார்.  இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும் கட்சித் தலைவர் என்று…

சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் –  பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்;  நல்ல பண்பு நலன்களைக்…

திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் :  தொடர்ச்சி)    3. காமத்துப் பால் 15.  கற்பு இயல் 129.   புணர்ச்சி விதும்பல்   பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,       கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.       நினைத்த, பார்த்த உடனேயே,         மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்       காமம் நிறைய வரின்.       பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,         தினைஅளவும் ஊடல்…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8   தலைமை வணக்கம் சித்தர்தம்   மறுபிறவி    ஆனை   வாரி சிந்தனையின்    தோற்றந்தான்    ஆனை   வாரி புத்தர்தம்    உள்ளந்தான்    ஆனை   வாரி புதுக்கருத்தை    விதைப்பவன்தான்   ஆனை   வாரி புத்தகங்கள்    தோழன்தான்    ஆனை   வாரி புதுமைகளைப்    படைப்பவன்தான்   ஆனை   வாரி முத்தமிழர்   கண்டதமிழ்    மருத்து   வத்தை முதன்மையென    உணர்த்துபவன்    ஆனை   வாரி !   திருக்குறளைத்   தேசியநூல்    ஆக்கு   தற்குத் தில்லியிலே   போராட்டம்   செய்த   வல்லோன் அருங்குறளை   ஆங்கிலத்தில்    மொழிபெ    யர்த்தே…

யாரைத் தேர்வு செய்வார்? – கெருசோம் செல்லையா

யாரைத் தேர்வு செய்வார்? நல்லார் கெட்டார் என்றிருவர் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால், எல்லா வாக்கும் பெற்றவராய், ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்! இல்லா நேர்மை இவ்வுலகில், இறைமகன் இயேசுவே நின்றாலும், பொல்லார் வாக்கு தரமாட்டார்; புனிதரைத்தான் கொன்றிடுவார்! – கெருசோம் செல்லையா

இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்

இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே!   வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6   மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7   மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை…

கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்

வைகாசி 06, 2048 /  20/5/17 அன்று மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இளங்குமரனார்க்குக் கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் பேராசிரியர் செல்வகுமார்   விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் (பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக!)   முனைவர் மறைமலை இலக்குவனார் உரையின் ஒரு பகுதி: https://www.youtube.com/watch?v=chnuQZ40dpA&feature=youtu.be

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்!   மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:     இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…

பூவுலகு: சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ்

பூவுலகு:  சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ்  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை திணை அடிப்படைகளில் கட்டுரைகள் சூழலியல் ஒளிப்படக்கட்டுரை சூழலியல் நிகழ்வுகள் பூவுலகின் நண்பர்கள் யார்? சுற்றுச்சூழல் இணைப்புகள் அறிமுக  எழுத்தாளர் படைப்புகள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சூழல் இன்று பூவுலகின் நண்பன் பூவுலகு நூல் அங்காடி பூவுலகு  விலையில்லா நூல்கள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சுற்றுச்சூழல் திரைப்படம் பூவுலகு காணொளிகள் பூவு – குழந்தைகளுக்கான சூழலியல் சூழலியல் கலை, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் சூழலியல் செவ்வி சித்த மருத்துவ சூழலியல் நதிகளைத் தொலைத்தோம் மரங்களின் நிழலில் வாழ்வோம் சூழலியல்-தத்துவம்,கொள்கை,அறிக்கைகள் சூழலியல் சொல் நிலைத்துவமான, கவித்துவமான படைப்புகளுடன் பூவுலகு மின்னிதழ் இந்த இணைப்பில் சென்று  உங்கள் மொபைலில் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள் www.poovulagu.in…

சுடும்! சுடும்! சுடும்! – மு இராமச்சந்திரன்

சுடும்! சுடும்! சுடும்! சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும்! வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் ! காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் ! பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் ! அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் ! சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…

உலகலாவிய சிறுகதைப் போட்டி

பேரன்புடையீர், வணக்கம். மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை…