மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 2/5    அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.   1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 25   பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய்க் கூறுகிறார். எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவுபடுத்தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன. தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு! திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள் மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!. முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு! யாதினிலும் இனிய தெய்வம் நம்மை…

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்!   மரபார்ந்த விழாக்களுக்கும் அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளைப் பரப்புவது ஆரியத்தின் வேலை. அறிவுக்கு வேலை கொடுக்காமல் அவற்றை நம்புவது தமிழர்களின் மூடநம்பிக்கை.  பிற இனத்தார், இயற்கைக் கோள்களுக்கும் மூடநம்பிக்கைகக் கதைகளை உருவாக்கிய காலத்தில், அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையைக் கண்டறிந்த தமிழர்கள் அறியாமைக்கு அடிமையானது இரங்கத்தக்கதே! ஆனால், இன்றும் அறியாமை இருளில் மூழ்கிக்கிடப்பது அத்தகையோர் இருந்தென்ன, இறந்தனெ்ன என எண்ணத் தோன்றுகிறது.   தமிழ்நாட்டில் கார்த்திகை  ஒளிவிழாவாகக் கொண்டாடப்பட்ட நாள்,  வடக்கிலிருந்து தீபவரிசை விழாவாக,  தீபாவளியாக…

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்   போகும் இடமெல்லாம் எடுத்தேதான் செல்கிறாள்… இன்னும் எழுதாக் கவிதைகளை! +++ ஒப்படைத்து விட்டாள் சொற்களைக் கவிதைகளாக்கி வாசகர் வசம்..! வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30 : ‘திருவாசகமும் நானும்’

ஐப்பசி 04, 2048 சனிக்கிழமை 21.10.2017 மாலை 6 மணி சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) இலக்கிய நிகழ்வு ‘திருவாசகமும் நானும்’ சிறப்புரை : சந்தியா நடராசன் [தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர்] அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.  மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

  மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ. மறைமலையடிகள் சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு : 1876இல் பிறந்த நாள் : சூலை 15 பிறந்த ஊர் :  காடம்பாடி வட்டம் : நாகப்பட்டினம் தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை இளமைப் பெயர் : வேதாசலம்  படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்  சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர் பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில் முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம் திருமணம் : 17ஆம் ஆண்டில்…

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்   சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – வித்துவான். மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 1-1-1899 என் தமிழாசிரியர் நாராயணசாமி(ப் பிள்ளை)யைத் திருவாரூர் சென்று கண்டேன். – மறைமலையடிகள் மறை. திருநாவுக்கரசு விளக்கம்: இவர் நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வணிகம் நடத்திவந்தவர். கள்ளர் குலத்தோன்றலார்; வெ.நாராயண சாமி(ப்பிள்ளை),  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளையின்) மாணவராவர். இவர் சிறந்த இயற்றமிழாசிரியர். அடிகள் தமது இளமைப்பருவத்தே இவரையடுத்து இவர்பால் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச் செவ்வையாகக் கற்றுத் தேர்ந்தார். வித்துவான். மறை. திருநாவுக்கரசு (மறைமலையடிகள் வரலாறு: பக்கம் 4). நன்றி: குறள்நெறி, 01.02.1964

தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது…

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்!   வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா? – இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3   கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்!   “தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து சமய அடிப்படையாளர்கள். ஆனால், இந்து சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் அடிப்படையிலேயே பெருத்த முரண்பாடு உண்டு!   “கடவுள் என்பவர் அனைத்து வல்லமைகளும்…