புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: இது ஒரு வாழ்வா?

புறநானூற்றுச் சிறுகதைகள் 2. இது ஒரு வாழ்வா?     சோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கனைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போன கணைக்கால் இரும்பொறையைச் சிறை செய்து சோழ நாட்டின் தலைநகரில் இருக்கும் குடவாயில் கோட்டத்துச் சிறைச்சாலையில் அடைத்தும் விட்டான்; பெரு வீரனான சேரமானைக் கைதியாக்கித் தன் சிறையில் கொணர்ந்து அடைத்ததனால் இணையற்ற பெருமிதம் கொண்டிருந்தான் செங்கணான்.   செங்கணான் கொண்ட பெருமிதத்திற்குக் காரணம் இருந்தது. பிறர் எவருக்கும் அடிபணிய விரும்பாமல் சுதந்திரப் பேரரசனாகத் தன்மானப் பண்பிற்கே இருப்பிடமாய்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23)   தொடர்ச்சி)] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)  இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: – இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார் பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே மருட்தன்மை…

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற   கவிஞர் மு.முருகேசு   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.    சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள்…

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3   கடவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?…  கடவுள் மீது அன்பு(பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான்…

“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின்  25.10.1937 ஆம் நாள், குறிப்பு .  : ‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் :  இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார். மதுரையில், தியாகராசர் கல்லூரியைத் தம் உரிமைப் பொருள் கொண்டு நடத்தி வருபவர். நூல் ஆலைகள் பலவற்றின் உரிமையாளர். சிவநெறியின் பற்றாளர். அறங்கள்…

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்  – தமிழ் ஓவியா

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் ஆந்திராவில் – 29 ஊர்கள் அருணாசலப் பிரதேசத்தில் – 11 ஊர்கள் அசாமில் – 39 ஊர்கள் பீகாரில் – 53 ஊர்கள் குசராத்தில் – 5 ஊர்கள் கோவாவில் – 5 ஊர்கள் அரியானாவில் – 3 ஊர்கள் இமாசலப்பிரதேசத்தில் – 34 ஊர்கள் கருநாடகாவில் – 24 ஊர்கள் மகாராட்டிரத்தில் – 120 ஊர்கள் மேகாலயாவில் – 5 ஊர்கள் மணிப்பூரில் – 14 ஊர்கள்மத்தியப்பிரதேசத்தில் – 60 ஊர்கள் நாகாலாந்தில்…

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்  அஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே  ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும்   நயன்மைநிலை / நீதி  நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.   ஒருவர் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் அவர் அரசின்  ஆதரவாளர் என்றால் ஒரு வகையாகவும் இல்லை எனில் மற்றொரு வகையாகவும் சட்டம் கையாளப்படுவது நம் நாட்டு…

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!   எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும்.   இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’…

வாசிப்புப் போட்டி 2017

வாசிப்புப் போட்டி – 2017    வாசிப்புப் போட்டி 2017 யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர். எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகளை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடைகளைத்…

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் – சேசாத்திரி சீதரன்

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் ‘தமிழ் மொழி மீட்புப்போராளி’ இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் புரட்டாசி 21, தி.பி. 1854 / 5.10.1823  ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிக்காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனைத் தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்துத் தமிழை கருவியாக்கிப் போராடிய மாபெரும் புரட்சியாளர்தான் இராமலிங்க அடிகளார்.   அவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல்…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: ஒரு சொல்

புறநானூற்றுச் சிறுகதைகள்  நா. பார்த்தசாரதி 1. ஒரு சொல்   உறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாமப்பல் கண்ணனாருக்குச் சொக்கட்டான் விளையாட்டில் அதிகமான பழக்கமோ திறமையோ கிடையாது. ஆனால், அவரோடு விளையாடிக் கொண்டிருந்த மாவளத்தானுக்கோ அடிக்கடி அந்த விளையாட்டை விளையாடி விளையாடி நல்ல பழக்கமும் திறமையும் ஏற்பட்டிருந்தன. சாதாரணமாக இம்மாதிரித் திறமையால் ஏற்றத் தாழ்வு உடையவர்கள் எதிர் எதிரே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள்…

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை)   ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர்.  திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர்.  தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர்.  நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா (செட்டியார்) அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் …