திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்     வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு!   பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள்!   யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22)   தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும் கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக் கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை! பேதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப் பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர் எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே!   என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி நன்றி யுடன் இவ்வையம் சென்றி ருந்தால் நாசங்கள் நலிவேது? பூமித ன்னில் கொன்றொழிக்கும்…

புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு

கார்த்திகை 20 & 21 . 2048  / புதன் & வியாழன் 6 & 7 .12.2017 ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,   புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு   மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும். ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் செய்து தருகின்றார்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும், பார்வையாளர்கள் ஆகவும் – பங்களிப்புச் செய்பவர்களாகவும். அன்புடன் வி. சீவகுமாரன்,…

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்?   செயலலிதா முதல்வராகச் செயலபட்ட பொழுதே அவர்  நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.  பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றும்  ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களை வெவ்வேறு நாளில் எடுக்கப்பட்டனபோல் காட்டி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வந்தன. இவை யாவும்  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்பதை மெய்ப்பிக்கின்றன.    நோய்வாய்ப்பட்டவர் மருத்துவத்தில் பயனின்றி மரணமுற்றதைக் கொலைபோல் கருதிக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை.   செயலலிதாவைச் சாகடித்த பின்னரே மருத்துவமனையில்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21)   தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22) மதங்கள் சாதி மடமை இன்றி மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே விதந்து பிறரின் மதத்தில் சென்ற, வினைகள் மாற்றப் புறப்பட்டேன் என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ.   அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண் சமமும், திறமுடன் சங்கக் காலத்தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார். இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின் இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு: தம்மதம்…

கலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09

புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…

தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள் 

  தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள்   புரட்டாசி 02, 2048 / 18-09-2017 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் நிகழ்ந்த  பெரியார் பிறந்த நாள் விழாவில்  வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேரா. ஒப்பிலா மதிவாணன்  சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுவழங்கினார்  .  தமிழக அரசின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத்  தேர்வு செய்யப்பட்டுள்ள  தமிழ் மொழித் துறையின்முனைவர் பட்ட ஆய்வாளர்  திரு. சி. முருகனை வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்பித்தார்.   உடன் தமிழ் மொழித் துறைத் தலைவர் பேரா. ய. மணிகண்டன்.

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றத்தின் 15 ஆவது ஆண்டு விழா

புரட்டாசி 21, 20 / 2048   சனி,  ஞாயிறு  07.10. & 8/10.2017 புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் 15 ஆவது ஆண்டு விழா முத்தமிழ்க்கலை விழா  போட்டிகள், பரிசளிப்பு   முனைவர் முகிலை இராசபாண்டியன் திருவாட்டி மலர்விழி திரு ந.முத்து(ரெட்டி) த.மகாராசன்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்   துபாய் ஈமான்  பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா  ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா  கோபுரம்)  நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார்.    பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…

‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’, சென்னை

புரட்டாசி 18, 2048  /    04.10-2017  புதன்கிழமை      மாலை 6.00 மணி         நவீன விருட்சமும்  டிசுகவரி  புத்தக நிலையமும் இணைந்து நடத்தும் ‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’ புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,   சென்னை – 600078  (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

தமிழ், கலை, இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை

தமிழ், கலை இலக்கியங்களில் பண்பாடு பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை மாசி 04 & 05, 2049பிப்பிரவரி 16 & 17, 2018 அறிவிப்பு அழைப்பு மடல் தமிழ் முதுகலை – உயராய்வுத்துறை எத்திராசு கல்லூரி, சென்னை பதிவு, கட்டுரை இறுதி நாள் மார்கழி 10, 2048 – திச.25, 2017 ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் பெ. நிருமலா முனைவர் பா.கௌசல்யா முனைவர் கு.சிதம்பரம் தொலைபேசி : 9566069208 / 9444418670 / 9176363139 மின்னஞ்சல் : tamilbk2014@gmail.com கருத்தரங்கம் பற்றிய பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள:…

‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்