இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08–  சி.இலக்குவனார் நகரங்கள்  நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே.  நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா.  விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும்.  வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…

கா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ.

கா. சுப்பிரமணியப் பிள்ளை  பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களைத் தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் தமிழ்க் காசு என்று கூறுவதுண்டு.   அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை  ‘எம்.எல். பிள்ளை’ என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்‘ எனக் குறிப்பிடுவர்.   அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை  உண்டாக்கித் தமிழகத்திற்கு…

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா

(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 –  தொடர்ச்சி) காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4  காக்கைக்கு வழிகாட்டல்  முதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே! நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே! மறையவரே! நானும்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33   வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார், “அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம் இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக் காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்! சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!…

‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்

காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை  ‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர் வேலரசு (எ) தமிழரசன், தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். நூலைப் படித்துப் பார்த்தபோது, இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது என்று தோன்றியது.  மறைந்த தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள், குறள்   வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ”பார்த்தால் குறள், படித்தால் பொருள்” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால்…

வெற்றிச்செழியனின் ‘நம்பிக்கை நாற்றுகள்’ வெளியீட்டு விழா

மார்கழி 09, 2048 ஞாயிறு 24.12.2017 மாலை 4.15முதல் இரவு 8.15 வரை பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர் வெற்றிச்செழியனின் நம்பிக்கை நாற்றுகள் நூல் வெளியீட்டு விழா   வெளியீடு :  திருமிகு பேரரசி பெறுநர் : திருஉலோ.சத்தியராசு                         பொறி.தி.ஈழக்கதிர்     வளமை பதிப்பகம் 9840977343, 044 2478 2377

காலத்தின் குறள் பெரியார்  நூல் வெளியீட்டு விழா

  ‘காலத்தின் குறள் பெரியார்’  நூல் வெளியீட்டு விழா மார்கழி 07, 2048 வெள்ளி திசம்பர் 22,2017 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008 நூல் வெளியீட்டுச் சிறப்புரை:  பேரா.சுப.வீரபாண்டியன்   அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப்…

பிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு,  சென்னை

மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 மாலை 6.00 முத்தமிழ்ப்பேரவை, சென்னை 600 020 பிரதிபா இலெனின் நினைவேந்தல் படத்திறப்பு : மு.க.தாலின் பிரதிபா நூல் வெளியீடு :  ஆசிரியர் கி.வீரமணி நூல் பெறுநர் : புரட்சிப்புயல் வைகோ நினைவுரை : நக்கீரன் கோபால் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நினைவில் அழைக்குநர் : கோவி.இலெனின்

தமிழ்க்குறும்பா நூற்றாண்டு, காந்திநகர்

மார்கழி 09, 2048 ஞாயிறு திசம்பர் 24, 2017 காலை 10.30 தமிழ்க்குறும்பா நூற்றாண்டு காந்திநகர் அரசுநூலக வாசகர் வட்டம்  அடையாறு, சென்னை தலைமை: கவிஞர் மு.முருகேசு

இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் அறைகூவல்களும் – சாவித்திரி கண்ணன் சிறப்புரை

மார்கழி 07,2048 வெள்ளி திசம்பர் 22,2017  மாலை 6.30 பாரதிய வித்யா பவனுடன்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும் தொடர் நிகழ்வு   வரவேற்பு : செல்வி ப.யாழினி தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன்  இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில்  சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர் எழுத்தாளர் திரு சாவித்திரி  கண்ணன். அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன் நன்றியுரை : சிபி நாராயண்

அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

  அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர், திருக்குறள் 256) உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும். “நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்” “வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது…

1 3 4 5 9