திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன்

திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2  1.0.நுழைவாயில்         மதிப்பு, மரியாதை, மேன்மை, மேம்பாடு, மிகுபுகழ், உயர்வு, உயரம், பெருமை, பெருமிதம், சீர்மை, சிறப்பு, செம்மை, செழிப்பு போன்ற மாண்புகளைப் பெற்று மாந்தன் மாந்தனாக வாழ்தல் வேண்டும். அதற்கு மாந்தன் சாலச்சிறந்த சமுதாய விழுமியங் களை  [SOCIAL VALUES] பழுதில்லாமல் வழுவில்லாமல் இடைவிடாமல் இறுதிவரை கடைப்பிடியாகக் கொள்ளல் வேண்டும்,.        இத்தகைய சாலச்சிறந்த சமுதாய விழுமியங்களைப் சங்க இலக்கியங்களிலும் பொங்குபுகழ் வாழ்வியல் பயன்பாட்டு நூலாக விளங்கும் திருக்குறளிலும் காணலாம்.  2.0.விழுமியங்கள் — விளக்கம்  …

தமிழ் வளர்கிறது! 16-18 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன் – தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 16-18  ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும் தீங்கிலேயே என மொழிவார்; தமிழில் எங்கும் செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார். தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணி ராலே தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் !  (16)   கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அதனைப் போலே கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான் கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு…

பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!

பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப்  பொங்கல் விழா!     தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.   தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார். 7. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 3.இல்லறத் துணைவர் இனிதே சேர்தல்  உலகியல் வாழ்வை உவப்புறத் துய்க்க இல்லறமே இனிதெனக் கண்டோம்; இல்லறத்தை இனிதே நடத்த இனிய துணைவி இன்றியமையாதவள் என்று தேர்ந்தோம். இனிய துணைவியை எவ்வாறு அடைவது?  இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என…

உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

  உருசிய  நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி  (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு

ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி   அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773  

பொங்கல் திருநாள் – திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து!

  சாதியும் சமயமும் நாளும் அழிப்பன! அன்பும் அறனும் என்றும் வளர்ப்பன! அறநெறி போற்றுவோம்! அல்லவை போக்குவோம்! தமிழ்நலம் காப்போம்! உயிரினம் மதிப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை அகரமுதல 221  தை 01 – 07, 2049 , சனவரி 14-20,2018  

காலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் : 2  அதிகாரம் 2. வள்ளுவம் போற்றுதல்   அருளே அறிவே அகத்தூய்மை மூன்றன் பொருளே பொதுமறை தான். பிறப்பால் பிரிவை வளர்ப்பார் மறுத்தே அறப்பால் பொழியும்முப் பால். பொறுப்பாய் இருப்பாய் எனத்தான் உரைக்கப் பொருட்பால் பொழியும்முப்  பால். காதலும் காமமும் சேர்ந்தே இசைந்திட வாழ்தலைச் சொல்லும்முப் பால். மொழிஇனம் நாடென்(று) எதையும் மொழியவில்லை வள்ளுவம் கொண்டபெரும் மாண்பு. உறவு மறுத்தல் அறமில்லை ஆண்பெண் உறவினில் வாழும்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11 உணவு, ஆறலைத்தனவும் சூறைகொண்டனவும் என்றும்; மா, வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும் என்றும்; மரம், வற்றின இருப்பையும் ஞமையும் உழிஞையும் ஞெமையும் என்றும்; புள், கழுகும் பருந்தும் புறாவும் என்றும்; பறை, சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும் என்றும்; தொழில், ஆறலைத்தலும் சூறைகோடலும் என்றும்; யாழ், பாலை யாழ் என்றும்; ஊர், பறந்தலை என்றும்; பூ, மராவும் குராவும் பாதிரியும் என்றும்; நீர், அறு நீர்க்…

காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 3. வள்ளுவர் வாழ்த்து.   அறம்பொருள் காமம் பகுத்துத் தொகுத்த திறமதைப் போற்றும்இப் பார். அரும்பாவாய் அஃதும் அறப்பாவாய் ஈந்து பெரும்பேறாய் வாய்த்தாரைப்  பேண். குறும்பா குறள்வெண்பா கொண்டுநாம் உய்யப் பெரும்பா உரைத்தாரைப் பேண். வள்ளுவப் பேராசான் வாய்மொழி வையகம் உள்ளவரை வாழும் நிலைத்து. மானுடம் தான்சுவைக்கத் தேன்குடம் கொண்டுவந்த மானுடன் வள்ளுவனை வாழ்த்து. 6. ஒன்றேமுக் காலடியில் வாழ்வளந்தான் வெற்றியை இன்றுவரை வென்றதுயார் இல்….

ஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள்  அறிவிப்பு

ஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள்  அறிவிப்பு 2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் தமிழக அரசின் விருதுகள் வரும் தை03 – சனவரி 16 அன்று  சென்னையில் வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழாவில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.  விருது பெரும் தமிழறிஞர்கள்   நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை,  தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கிச் சிற்ப்பிக்கப்படுவர்.   விருதாளர்கள் :   அ.சுப்பிரமணியன் –   அண்ணாவிருது, தா. இரா.தினகரன் –  காமராசர் விருது,  கோ….

மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்

  செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும்  முனைவர் மறைமலை  இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்  ‘செவ்வாய்தோறும்  செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….