நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி

  நாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா? இப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நட்சத்திரத்தைத் தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம். அஃதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 உடுக்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் உடுவுக்கும் உரியவையாகச் சில எழுத்துகள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துகளில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   20 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 387) இன்சொல் கூறி ஈதலைச் செய்யும் வல்லமையாளர் சொற்படி உலகம் நடக்கும் என்கிறார் திருவள்ளுவர். உதவுவதை விட முதன்மையானது அதனை இன்முகத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். வேண்டா விருப்பாகக் கோடி…

வாழ்க்கை வாழ்வதற்கே! – ஃபாத்திமா அமீது

வாழ்க்கை வாழ்வதற்கே!   துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்!   வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்!   சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்!   தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்!   மாற்றம்வரும்  மகிழ்ச்சி தரும்,  வழிகள்பல திறக்கும், வாழ்வோம் சிறப்போடு, வாழ்க்கை வாழ்வதற்கே!   காரைக்குடி ஃபாத்திமா அமீது  சார்சா.  தரவு: முதுவை இதாயத்து…

நவீனத் தமிழ் விமரிசன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)

ஆடி 32, 2050 சனி 17.08.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம்  ஆறாவது தளம், மயிலாப்பூர்,சென்னை 600 004 (சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : பிரவீண் பஃறுளி உதவிப் பேராசிரியர், குருநானக்கு கல்லூரி புதிய தமிழ்த்திறனாய்வு இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும்(1950-2000)

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 19 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 19 காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 386) அணுகுவதற்கு எளியவனாகவும் கடுஞ்சொல்லற்றவனாகவும் உள்ளவனை உலகம் உயர்த்திப் போற்றும் என்கிறார் திருவள்ளுவர். மீக்கூறுதல் என்பதற்குப் பரிமேலழகர், “ ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும்…

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.  பொதுவாக ஒரு நாட்டு…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 385) செல்வம் திரட்டுதவற்கான வழிவகைகளை உருவாக்கியும் தொகுத்தும் காத்தும் பகுத்து வழங்கலும் வல்லது அரசு என்கிறார் திருவள்ளுவர். இன்றைய நிதியியல் கூறும் கருத்தினை அன்றே திருவள்ளுவர் சொல்லி உள்ளார். இயற்றலும் ஈட்டலும் என்பதற்குப் பேரா.சி.இலக்குவனார், “ஒரு நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு உடையதாக இருக்க முடியாது.ஆதலின் என்னென்ன நம் நாட்டில் இல்லை? உண்டுபண்ண முடியாது என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து, இல்லாதவற்றை எந்தெந்த…

முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை

ஆடி 29, 2050 புதன்  14.08.2019 மாலை 5.30 (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சொற்பொழிவாளர் : முத்து நெடுமாறன், கணிணியியலர் தேநீர் மாலை 5.00 மூன்றாவது குறுக்குச்சாலை மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113  

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்

தானமும் தவமும் தமிழே! சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம். தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே! அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 (குறள்நெறி) உலகம் போற்றப்  புகழ்ப்பணி புரி! புகழோ இகழோ காரணம் நாமே என உணர்! புகழ் வரும் வகையில் செயல்புரிக! புகழ் பெறா வாழ்க்கை வாழாதே! நிலப்பயன் குன்றுமாறு, புகழில்லாமல் வாழாதே! வாழ்வதாயின் இகழ்ச்சியின்றி வாழ்! வாழ விரும்பவில்லை யெனில் புகழ் நீங்கி வாழ்! உண்மைச் செல்வமாகிய அருட்செல்வத்தையே கொள்! அனைத்து வழிக்கும் துணையான அருளாட்சியை அடை! துன்பம் அடையாதிருக்க, அருளுடன் வாழ்!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல்…

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019: – கருத்தரங்கம்

27, 2050 / 12.8.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரைஇடம்: பட்டம்மாள் நடேச(முதலியா)ர் திருமண மண்டபம். பாலாண்டீசுவரர் கோயில் தெரு, மாங்காடு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 – கருத்தரங்கம் தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்) வரவேற்புரை: டி.ஆர்.சான்வெசுலி(பொதுச் செயலாளர்) முன்னிலை: சு.உசாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்).க.செயராமன் (தலைமை நிலையச் செயலாளர்) கருத்துரை வழங்குவோர்: பு.பா.பிரின்சு கசேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), கோ.கருணாநிதி (பொதுச்…