ஔவையார் 6 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார் : 15 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 14. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி)   ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார். இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து…

அகரமுதலி விருதுகள், கடைசி நாள் 31.08.2021

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் பின்வரும் விருதுகள் வழங்கப்பெறுகின்றன. விருதிற்கு விண்ணப்பம் பெறக் கடைசி நாள்: ஆவணி 15, 2052 / 31.08.2021 தூய தமிழ்ப் பற்றாளர் விருது நற்றமிழ்ப் பாவலர் விருது தூய தமிழ் ஊடக விருது தேவநேயப் பாவாணர் விருது வீரமாமுனிவர் விருது விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி அந்தந்த விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல் தளம், எண்:…

கவிதைக்கான இளம்பிறை விருது, கடைசி நாள் 30.11.2021

சிறந்த தமிழ்க்கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும் கவிதைக்கான இளம்பிறை விருது பரிசுத் தொகை உரூ.20,000/ கடைசி நாள் : கார்த்திகை 14, 2052  30.11.2021 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி Kavithai2021padaipakkam@gmail.com பிற விவரங்களைப் பின்வரும் படஉருவில் காண்க:

தமிழர் கடவுட் கொள்கை – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  16 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17 8.கடவுட் கொள்கை சங்ககாலத் தமிழ் மக்கள் உயர்பண்பாடு உடையவர்கள் என்பதனை அவர்கள் கொண்டிருந்த கடவுட் கொள்கையும் நன்கு நிறுவும். ‘கடவுள்’ என்னும் சொல்லே அவர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தினை நன்கு விளக்கும். ‘கடவுள்’ என்றால் “உள்ளத்தைக் கடந்தது” என்பதாகும்.  உள்ளத்தாலும் உணர இயலாத இயல்பினது ‘கடவுள்’ என்பதுதானே கடவுளைப்பற்றிய உண்மைக் கொள்கையாகும்.  இதனை நன்கு தெளிந்திருந்தனர் என்பதனைக் கடவுள் எனும் சொல்…

என் பார்வையில் திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன் உரை

திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையக்(Zoom) கருத்தரங்கம் 12 ஆடி 28, 2052 / வெள்ளி / 13.08.2021 மலை 6 .00       என் பார்வையில் திருக்குறள் 1 சிறப்புரை:  இலக்குவனார் திருவள்ளுவன் குறி எண் (Meeting ID ) : 834 6167 5237 கடவுச் சொல் :  202020 இவண் தகடூர் சம்பத்து 98427 87845 /  88704 87845

ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி

(ஒளவையார்:4: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 14 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; “மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 21

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 20. தொடர்ச்சி) அகல் விளக்கு எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே ‘சொஞ்சரி சொஞ்சரி’ என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என்…

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா?  பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை.  எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில்…

ஔவையார் 5 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 14 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 13. தொடர்ச்சி) 3 . ஔவையார் (தொடர்ச்சி) இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் முத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், “நின்னாட்டுடைத்து நல்லதமிழ்” என்றார்….

தமிழர் இல்லறம் (தொடர்ச்சி) – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  16 7. இல்லறம் தொடர்ச்சி   திருமணத்தில் பெண்ணுக்குத் தாலியணிதல்பற்றி ஒன்றும் கூறப்பட்டிலது. பெண்ணுக்குத் தாலி எனும் அணி உண்டு என்பது கணவனோடு வாழுகின்றவர்களை “வாலிழை மகளிர்” என்று அப் பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் தெரியலாம். `வாலிழை’- உயர்ந்த அணி- என்பது தாலிiயைத்தான் குறிக்கும். திருமணத்தில் மணமகளுக்குத் தாலி கட்டுதல் தமிழரிடையே மட்டும் காணப்படும் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும். திருமணத்தோடு தொடர்புடைய இன்னொரு சடங்கும்…

ஒளவையார்:4 : ந. சஞ்சீவி

(ஒளவையார்:3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 13 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன்,…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 20

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 19. தொடர்ச்சி) அகல் விளக்கு மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத…