வெருளி நோய்கள் 1316 -1320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1311 -1315 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1316 -1320 கணவன் அல்லது மனைவி, தன் மனைவி அல்லது கணவன்மீது கொண்டுள்ள அளவுகடந்த பேரச்சமே (வாழ்க்கைத்) துணைவர் வெருளி.துணைவரின் தவறான பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணங்கள், பொறுப்பற்ற தன்மை, கட்டாயத் திருமணம், உள்ளத்தில் இடம் தராமை போன்றவற்றால் வாழ்க்கைத் துணைவர் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால், திருவள்ளுவர் கூறுவதுபோல் வாழ்க்கைத் துணை நலத்தைப் பேணினால், இதற்கு இடமில்லை.00 வண்ணங்களைத் தூவி வரையப்படும் துமி…

சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர்‌    பயிற்சிச் சட்டம், 1961  இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship      பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற்  பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…

நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…

வெருளி நோய்கள் 1311 -1315 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1306 -1310 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1311 -1315 ஊர்திகளில் முகப்புக் கண்ணாடியில் மழைநீரைத் துடைப்பதற்காக உள்ள துடைப்பி (wiper) மீதான அளவுகடந்த பேரச்சம் துடைப்பி வெருளி.shua என்னும் சீனச்சொல்லிற்குத் தூரிகை, துடைப்பி என்று பொருள்கள்.00 துணிமணிகள் அடுக்கம்(clothing rack) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துணிமணி அடுக்கம் வெருளிஇத்தகையோர் துணிமணிகள் அடுக்கத்தில் துணிமணிகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை என்பதுபோன்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.காண்க: உடைப் பேழை வெருளி(Vinitophobia)00 துணி உலர்த்தி(clothes dryer) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் துணி உலர்த்தி வெருளி.சரியாக…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் + ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644) தமிழே விழி!           தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம் நாள்: சித்திரை 13, 2057 ஞாயிறு 26.04.2026 காலை 10.00     கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,…

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : 3 இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார். இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர்…

வெருளி நோய்கள் 1306 -1310 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1301 -1305 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1306 -1310 தீவுபற்றிய காரணமற்ற, தேவையற்ற பேரச்சமே தீவு வெருளி.வாய் வாள்வலம்படு தீவின் பொலம் பூண் வளவன்என எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் புறநானூற்றில் (397:21-2) தீவு குறித்துக் குறிப்பிடுகிறார்.பொலம்படு தீவிற்குஎனப்பொன்மலிந்துள் தீவைப் பெருங்கதை (நரவாண காண்டம் 1.2.) கூறுகிறது.பொன் நிறைந்த தீவு மேல் ஆர்வம் ஏற்படுவதுபோல் அதனை அடைவதில் அச்சம் ஏற்படுவதும் இயற்கைதானே! Insula என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தீவு.00 மூச்சுடன் கரித் தூளைக் கலந்து இழுப்பது குறித்த மிகையான பேரச்சம்…

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!  “சினனே காமம் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் வுடைமை தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து) அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்”   பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38) பெயர் – கயிறுகுறு முகவை (14) துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050 1047. Appreciation ஆராய்தல்‌; பாராட்டுதல்‌; மதிப்பிடுதல்‌; விளங்கிக்‌ கொள்ளுதல்‌ சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும். இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது. 1048. Appreciation of evidence சான்றின்‌ மதிப்பீடு சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள். சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின்…

வெருளி நோய்கள் 1301 -1305 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1296 -1300 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1301 -1305 கெட்ட மூச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயமூச்சு வெருளி.வாய்த்தூய்மையின்மை, பற்கள் சிதைவு, ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற காரணங்களால் வாயில் தீய நாற்றம் வருகிறது. வாயைத் தூய்மையாக வைத்துக்கொண்டு இதைத் தடுக்க வேண்டும். மாறாகத் தவறான எண்ணங்கள் கொண்டு தீய கற்பனைகளை வளர்ப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு நல்கும்.halitosis என்றால் கெட்ட மூச்சு.00 தீயன பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயன வெருளி.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் (குறள்…

குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 44 புகழைத் தருவது நற்றுணையே! மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457) மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே! பதவுரை: மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம்,…

வெருளி நோய்கள் 1296 -1300 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1296 -1300 தீயிலை அல்லது ஈவில் இலீபி(Evilleafy) என்னும் அசைவூட்டப்படப் பாத்திரத்தின் மீதான அளவுகடந்த பேரச்சம் தீயிலை வெருளி.கற்பனைத் தீவிற்கான சண்டை(BFDI- Battle for Dream Island), மறுபடியும் கற்பைனத் தீவிற்கான சண்டை (BDFIA-Battle for Dream Island Again) ஆகிய மெய்ம்மைக் காட்சியில் (reality show)இடம் பெறும் கற்பனை அசைவூட்டப் பாத்திரமே தீயிலையாள் / தீயிலை.00 தீயச் சூழல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயச் சூழல் வெருளிபொதுவாக மக்கள் தீய…