கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! பூங்கொடியின் உறுதிமொழி எத்துயர் வரினும் எடுத்த பணியேஇலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோஇலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80யாரே செயல்செய வல்லார்? யானும்நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் கலகப் பொருளுடை கடிகதில்…
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும். கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com 1. இலக்குவனார் விருது தொல்காப்பியத்தைப்…
ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!
ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 81-100 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 261-265 261. abstracted பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய வேறு சிந்தனையில் உள்ளதால் சுற்றி நிகழ்வது குறித்துக் கருத்து செலுத்தாமை 262. Abstraction பிரித்தெடுத்தல் கருத்துப்பொருள்; கவர்ந்துகொள்ளல்; கவனமின்மை தவறான கையாளுகைக்காக நிதியை அல்லது நிதிக்கணக்குகளை உரிய இசைவின்றி எடுத்தல் ஊறு விளைவிக்க அல்லது வஞ்சிக்கும் நோக்கில் எடுத்தல் 263. absurd பொருளற்ற விழலான ; காரண காரியத்…
உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம்
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 84: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-52 திருப்பெருந்துறைப் புராணம் ஆசிரியரின் உத்தரவுப்படி நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தபிறகு அவரைப் பிரிந்திருக்க நேர்ந்தது பற்றி மிகவும் வருந்தினேன். ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய அன்பும் தம்பிரான்களுடைய பழக்கமும் அவ் வருத்தத்தை ஒருவாறு குறைத்தன. திருவாவடுதுறையில் உணவு விசயத்தில் எனக்கு ஒரு விதமான குறைவும் இல்லை. பொழுது போக்கும் இனிமையாக இருந்தது; குமாரசாமித் தம்பிரானுடைய சல்லாபம் எனக்கு ஆறுதலை அளித்தது. ஆசிரியர் கட்டளையிட்டிருந்தபடி, தம்பிரான்கள் எல்லாரிடமும் நான் மிக்க…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்- தாெடர்ச்சி) தமிழர் வீரம்வீர விளையாட்டு வீர விளையாட்டில் என்றும் விருப்பமுடையவர் தமிழர். வேட்டையாடல், மல்லாடல், ஏறுதழுவுதல் முதலிய விளையாட்டங்கள் மிகப் பழமை வாய்ந்தனவாகும். வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர் வேடர் என்றும், வேட்டுவர் என்றும் பெயர் பெற்றனர். மற்றும் வில்லாளராகிய பெருநில மன்னரும், குறுநில மன்னரும் பொழுதுபோக்காக வேட்டையாடினர். காவிரிக் கரையிலும், பாலாற்றங் கரையிலும் பரந்து நின்ற காடுகளில் வேட்டையாடப் புறப்பட்ட சோழமன்னன் கோலத்தைக் கலிங்கத்துப் பரணியிலே காணலாம். மல்லாட்டத்தில் வல்லவர் மல்லர் எனப்படுவர்….
சனாதனம் – பொய்யும் மெய்யும்: முன்னுரை- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் முன்னுரை சனாதனம் தமிழர்க்கு மட்டுமல்ல, மனித உலகிற்கே எதிரானது. ஆனால் திட்டமிட்டே சனாதனம் குறித்து உயர்வாகப் பரப்புவதால் மக்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் “அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு என்ன?” என்று எண்ணுகிறார்கள். சனாதனத்தால் மிகுதியாக எப்பிரிவினர் தீங்கிற்கு ஆளாகிறார்களோ அப்பிரிவினரையே அதற்கு ஆதரவாகப் பேச வைப்பதுதான் சனாதனவாதிகளின் வெற்றியாகிறது. சான்றுக்கு ஒன்று பார்க்கலாம். நேரு, பெண்களுக்குச் சொத்துரிமையில் பங்கு உண்டு எனச் சட்டம் கொண்டுவர சட்ட வரைவைக் கொண்டு வரும் பொழுது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை
என் தமிழ்ப்பணி பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்…
சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை
சனாதனம் – பொய்யும் மெய்யும் பதிப்புரை வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர். தன்மதிப்பாளர்கள் அதனை எதிர்த்து வந்தனர். சில திங்கள் முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் பேசிய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று குறிப்பிடாமல் சனாதன ஒழிப்பு…
சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 256-260 256. abstract of judgment தீர்ப்பாணைச் சுருக்கம் தீர்ப்பின் சுருக்கம் அல்லது தீர்ப்பாணையின் சுருக்கம் என்பது, ஒரு தீர்ப்பின் எழுதப்பட்ட சுருக்கமாகும். வழக்கில் வென்றவருக்கு(தீர்ப்புக் கடனாளி) இழப்பீட்டு எதிர்வாதி எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. தீர்ப்புத் தொகை, நீதிமன்றச்செலவுகள், இழப்பீட்டு எதிர்வாதி கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய உத்தரவுகள், செலுத்தப்பட வேண்டிய வட்டி விகிதம், ஆகியவை குறிக்கப்பெற்ற சுருக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டு,…
ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00 ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி ந.காருண்யா தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை…
