சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 211.absolute justice முழுமை நீதி முழுமையான நீதி என்பதை ஒரு கோட்பாடாகக் கருதுகின்றனர். குறிப்பாகக் கடற்படையினர், கடல்சார் சோட்பாட்டின் மையக் கொள்கையாகக் கருதுகின்றனர். முழுமை நீதி ஆதரவாளர்கள் அனைத்துத் தீய, சட்டஎதிர் செயல்களை ஒழிப்பதையும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதையும் மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கருதுகிறார்கள். “எந்த இடர்ப்பாடு குறைபாடு அல்லது ஊறுபாடுகளினால் ஏற்படும் தீங்கிலிருந்து காப்பாற்றும் முழுமை நீதி என்று…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அபய வார்த்தை ஓதுவார், “ஐயா, அவரைச் சொன்னால் நாக்கு அழுகிப்போம்.இருந்திருந்து பரம சாதுவாகிய அவரைச் சொல்ல உமக்கு எப்படி ஐயா மனம்வந்தது!” என்றார். அம் மனிதர் ஒன்றும் சொல்ல மாட்டாமல் எழுந்து போய்விட்டார். அபய வார்த்தை அந்த மூவர் வார்த்தைகளையும் நான் கேட்டேன். “நல்ல வேளை,பிழைத்தோம்” என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. உடனே எழுந்தேன்.“இவ்வளவு நேரம் என்னைப் பற்றி நடந்த சம்பாசணையைக் கவனித்தேன்.எனக்கு முதலில் உண்டான சங்கடத்தை நீங்கள் நீக்கி…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 8தமிழ்நாட்டுக் கோட்டைகள்அரண்மனை நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும். தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.1 மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை…
வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி
(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது…
சட்டச் சொற்கள் விளக்கம் 206-210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 206-210 206. absolute duty பூரணத் தீர்வை வரைக்கட்டு(நிபந்தனை) அற்ற தீர்வை முழுமைக் கடமை உடனிணைந்த உரிமைகளற்ற கடமை வணிகவியலில் தீர்வை வரியைக் குறிக்கிறது. நேரம், முயற்சி, செலவு ஆகியவற்றைப்பொருட்படுத்தாமல் தொடர்புடைய ஒழுங்குமுறைக்கேற்பக் கடமையாற்றுதல். அ.) பிற தீயரைத்தவிர்த்தல், ஆ.) மக்களைச் சமமாக மதித்தல், இ.) பிறரிடம் உள்ள நல்லனவற்றை ஊக்குவித்தல் ஆகிய முந்நிலைப்பாடும் உள்ளவற்றை முழுமையான கடமை என்பார்கள்….
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக-தொடர்ச்சி) அத்தியாயம் 8. கடல்நகரில் தங்கிய காதைநகரத்தார் வேண்டுதல் தாமரைக் கண்ணி தன்னொடு வந்ததோமறு பூங்கொடி தூயநல் லுரையால்திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,`இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் 5புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்துமல்கிருள் அகல மதியொளி பெற்றுநல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்போதல் ஒழிமதி!’ எனுமுரை புகன்றனா 10 அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்தோமறு பணிசெயத் தூயவ ளாகியதாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098- 1120 -தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 (கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம் இணைய அரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து பகுத்தறிவுத்…
சட்டச் சொற்கள் விளக்கம் 201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 201-205 201. absolute conveyance முழுமை உரித்து மாற்றம் முற்றுரிமை மாற்றம் முழு உடைமை மாற்றம் உரித்து என்றால் உரிமை உடையது எனப்பொருள். “பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம் 955). 202. absolute decree முழுமைத் தீர்ப்பாணை இறுதியாக வழங்கப்பெறும் தீர்ப்பாணையே முழுமையான தீர்ப்பாணை யாகும். மணவிலக்கு வழக்கில், மணவிலக்கு நடைமுறையை முடிக்கும்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் : அத்தியாயம்- 48 : சில சங்கடங்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 78 : அன்பு மூர்த்திகள் மூவர்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்- 48 சில சங்கடங்கள் ஒரே மாதிரியான சந்தோசத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பதுஇவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலேஇன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலேசெழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம்துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல்இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும்அபாக்கியர்களும் இல்லை. எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி இலாபமும்திருவாவடுதுறையிலே கிடைத்தன. மனத்திலே சந்தோசம் இடையறாதுஉண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றிஇருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோசத்திற்குத் தடை நேராமல்இல்லை….
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 7கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்”1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர்இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல்…
குவிகம் இலக்கிய வாசல், குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு
குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார் நிகழ்வில் இணைய நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib
