கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி) பூங்கொடி முத்தக் கூத்தன் கல்லறை கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,அதனைக் காணின் அச்சம் தொலையும்,மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்கநெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்குநஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!நாடும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு   Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி) என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சிஒரு செய்யுள் செய் இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதைநான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன். ‘ஒரு செய்யுள் செய்யட்டும்’ சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்துஅவ்வழியே சென்றார்….

ஊரும் பேரும் 63 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சமணமும் சாக்கியமும்

(ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம் – தொடர்ச்சி) சமணமும் சாக்கியமும்எட்டு மலைகள் முன்னாளில் சமண சமயம் தமிழ் நாட்டில் பல பாகங்களிற் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் தலைமை நகரங்களின் அருகே தம் தவச் சாலைகளை அமைத்துச் சமயப்பணியாற்றுவாராயினர். பாண்டி நாட்டில், நெடுமாறன் அரசு புரிந்த ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் எங்கும் ஆதிக்க முற்றிருந்த பான்மையைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.1 அக்காலத்தில் மதுரையின் அருகேயுள்ள குன்றுகளைச் சமண முனிவர்கள் தம் உறையுளாகக் கொண்டிருந்தார்கள் என்பது திருஞான சம்பந்தர்…

கனடா, தொல்காப்பிய மன்ற இணையக்  கருத்தரங்கு – 06/07.2024

அன்புடையீர்! கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு”  சனவரி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054  / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு , தமிழ் நாட்டு நேரம்  மார்கழி 22, 2054  ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு  மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். சிறப்புரை:   முனைவர் செல்வநாயகி சிரீதாசு நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல் உரையாளர்களும் தலைப்புகளும்  திரு இலக்குவனார் திருவள்ளுவன் – தமிழ்க்காப்புத் தலைவர்…

வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்

க. திருக்குறள் தெள்ளமுதம் அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை நலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இந்நாள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருந்திய மொழிகள் இரண்டே. அவை நந்தம்…

சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 96. Abeyance   செயலற்ற தன்மை இடைநிறுத்தம்  செயல்நிறுத்தம் நிறுத்தி வைத்தல்   உரியரிலாநிலை   காலவரையறையற்ற அல்லது இடைக்கால செயலற்றநிலையைக் குறிப்பது.   இடைநீக்கம் என்கின்றனர். அவ்வாறு சொன்னால் suspension எனத் தவறான பொருள் கொள்ள நேரலாம். ஆங்கிலத்தில் பொருள் சரிதான். ஆனால், தமிழ் வழக்கில் இடையில் விலக்கி வைப்பது வேறு. முடிவு காண வழியில்லாமல் செயல்பாடின்றி ஒத்தி வைப்பது வேறு. ஒரு கோப்பு…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை) 1.முன்னுரை – தொடர்ச்சி சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எசு.கிருட்டிணசாமி ஐயங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்