தோழர் தியாகு எழுதுகிறார் : சொல்லடிப்போம் வாங்க!
(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி) கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது,…
சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார். 18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…
தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?
(தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கைச்சரக்கா மார்க்குசியம்? மார்க்குசுக்கு அடிக்கடித் தேர்வு வைக்கின்றனர். எந்த ஒரு சிக்கலுக்கும் மார்க்குசிய வழியில் தீர்வு காண்பது பற்றிய கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இசுரேல்-பாலத்தீனத்தின் மீத இசுரேல் நடத்தி வரும் இனவழிப்புப் போரைப் மார்க்குசிய வழியில் புரிந்து கொள்வதும் விளக்குவதும் எப்படி? இந்தியாவில் பாசிச பாசகவை எதிர்ப்பதற்கு மார்க்குசியம் வழிகாட்டுமா? குமுகிய நாடுகள் எனப்பட்டவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மார்க்குசியம் தரும் விளக்கம் என்ன? பொதுமைக் குமுகம்பற்றிய…
தமிழ்த் தேசியத் திருவிழா!, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், சென்னை
எங்கள் தமிழ் வாழ்க! தமிழ்த் தன்னுரிமை இயக்கம் முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! தமிழர் திருநாள் பொங்கல் விழா! தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத் தமிழ்த் தேசியத் திருவிழா! இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை, தியாகராயநகர் சென்னை-600017 நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி கவியரங்கம்: தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு! தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன் ஒருங்கிணைப்பு: கவிஞர் நல்ல…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் : அத்தியாயம்-41 ‘ஆறுமுக பூபாலர்’ ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி…
ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம்
(ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும் – தொடர்ச்சீ) ஊரும் பேரும் விண்ணகரம் தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விட்ணுவின் கோவில் விட்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன. திருவிண்ணகரம்கும்பகோண்த்திற்கு மூன்று கல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர். “திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்தன்னொப்பார் இல்லப்பன்தந்தனன்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 21 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த தில்லை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள்தமிழ் வளர்த்த தில்லை 15 இலக்கியத்தில் இறைமணம் சங்கக்கால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும். ‘திருமுறைகளைக் காத்த தில்லை தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி) பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும் இனிய அன்பர்களே! மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம். இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன்
தமிழர் பண்பாடு – முன்னுரை தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)1.முன்னுரை வரலாற்றின் குறிக்கோள் வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது…
சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித், தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும். தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது. தாவு/தாக்கு …
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி) 6. கல்லறை காண் காதை நிலவும் உடுவும் மாலைப் பொழுதில் மேலைத் திசையில் சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன் இரவெனும் ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட 5 நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; துதலிற் புரளும் சுருள்குழல் வரைய 10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன் களங்கப்…
தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!
(தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும்- தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெத்தலகேம் – கீழவெண்மணி: மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி! இன்று கிறித்து பிறப்பு நாள். சமயப் பண்டிகை எதுவும் நான் ஒருபோதும் கொண்டாடியதில்லை. கிறித்து பிறப்பு நாள் பற்றிப் பெரிதாக நினைப்பதும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கிறித்துநாதர் பிறந்த பெத்தலகேம் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. உலகம் எங்கும் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது என்றாலும் இந்தக் கொண்டாட்டத்தின் உச்ச மையம் பெத்தலகேம்தான். ஆனால் அந்தத் திருத்தலம் பண்டிகை கொண்டாடும்…
