தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!
(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!) ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: “இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.” 1948ஆம்…
சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 71. Abbreviate சுருக்கு நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல். காண்க: Abbreviation 72. Abbreviation குறுக்கம் குறியீடு சுருக்கக் குறியீடு குறுங்குறி குறிப்பெழுத்து சொல்குறுக்கம் சுருக்கீடு ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம். திருவள்ளுவருக்குப் பின் என்பதைத்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 : குறளகம் புகுதல் – தொடர்ச்சி) அடிகள் அடைக்கலம் அருளல் நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர் துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; 110 உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம் விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்’ என; 115 கோமகன் அகலுதல் `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின்…
தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு
(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாய்மண்ணை விட்டகலோம்!பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி! காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை. இசுரேலின் படையெடுப்புக்கு…
தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்
(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். தலைநகர் சென்னையைப் புரட்டிப் போட்ட புயல் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எழுதுகிறேன். ததேவிஇ அமைப்புச் செயலாளர், நம் அனைவருக்கும் அன்புத் தோழர் மகிழன் விடுத்துள்ள வேண்டுகோளை உங்களோடு பகிர்கிறேன். நம் தோழமையின் இடுக்கண் களைக ! – தோழர் தியாகு விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பின் துயர்துடைக்கக் கைகொடுங்கள்! அன்பிற்கினியோரே, வணக்கம் ! நான் மகிழன். தென்சென்னையிலிருந்து…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 979-984-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 51-60 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 61. abate in equal proportion சம விகிதத்தில் குறைப்பு பங்குகளை முழுமையாகச் செலுத்த இறந்தவர் சொத்துகள் போதுமானவையாக இல்லாவிட்டால் அச்சொத்தின் பயனாளர்களிடம் சரிவிகிதமாகப் பகிர்ந்து குறைத்தல் என்பது போன்று இழப்புகளைச் சரி விகிதத்தில் குறைத்தல் மாகாண மாநகர நொடிப்புச் சட்டம் பிரிவு 49.2. 62. Abatement தணிவு அறவு தள்ளுபடி, விலக்கிவை நூப்பு, அற்றுப்போதல், குறைப்பு…
தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2
(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி) ஏன் இந்தப் புத்தகம்? 2/2 1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை – தொடர்ச்சி) என் சரித்திரம்40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக இரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது. “சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய்…
தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2
(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன். இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல்…
ஊரும் பேரும் 60 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இறையும் அறமும்
(ஊரும் பேரும் 59 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சாத்தங்குடி – தொடர்ச்சி) ஊரும் பேரும் இறையும் அறமும் சிவபாத சேகர நல்லூரும் மங்கலமும்சைவ சமயத்தைச் சார்ந்த பெரு மன்னர்கள் தமிழ் நாட்டில் அரசு வீற்றிருந்தபோது சிவம் மணக்கும் சொற்களை ஊர்ப் பெயராக்கினார்கள். சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட இராசராசன் உண்டாக்கிய சிவபாத சேகரபுரம் இப்பொழுது சிவாயம் என வழங்குதலை முன்னரே கண்டோம். அம்மன்னன் பாண்டி நாட்டில் திருநெல்வேலிக்கு மேற்கேயுள்ள நல்லூரில் சில நிலத்திற்குச் சிவபாத சேகர நல்லூர் என்று பெயரிட்டு, அதனைச்…
தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது!
(தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! நவம்பர் புரட்சி நாள் வாழ்த்து! சென்ற ஆண்டு இதே நவம்பர் புரட்சி நாளில்தான் தாழி மடல் எழுதத் தொடங்கினேன். இன்றும் அதே ஊக்கத்துடன் எழுத விரும்புகிறேன். உடல்நிலைதான் நலிந்துள்ளது. பெரிதாக ஒன்றுமில்லை. கண்வலிதான், ஆனால் காலையில் வந்து மாலையில் போவதாக இல்லை. மூன்று நாளாக வதைக்கிறது. இந்தக் கண்வலிக்கு ‘சென்னைக் கண் (மெட்ராசு-ஐ)’ என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரை வைத்து நடந்த ஒரு கூத்தை…
