தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் – தஞ்சை மாநாடு நேற்று 10.10.2023 தஞ்சையில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் நடத்திய இன உரிமை எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தமிழ்நாட்டு, இந்திய நாட்டு, பன்னாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பதால் அவற்றை ஈண்டு பகிர்கிறேன். –:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: இன உரிமை இலட்சிய மாநாடுதஞ்சை, 2023 அட்டோபர் 10தீர்மானங்கள் இசுரேலின் இனவழிப்புப் போரை…
தமிழ் வளர்த்த நகரங்கள் 19 – அ. க. நவநீத கிருட்டிணன்: கூத்தன் ஆடும் அம்பலங்கள்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 18 – அ. க. நவநீத கிருட்டிணன்: புராணம் போற்றும் தில்லை – தொடர்ச்சி) 13. தில்லைத் திருக்கோவில் கூத்தன் ஆடும் அம்பலங்கள் தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் திருக்கோவில், இறைவன் திருக்கூத்து நிகழ்த்தும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். பொன் மன்றம், மணி மன்றம், வெள்ளி மன்றம், செப்பு மன்றம், சித்திர மன்றம் ஆகிய ஐந்தனுள் முதன்மை வாய்ந்த பொன் மன்றமாகிய கனகசபை, தில்லையில்தான் அமைந்துள்ளது. பொன்மன்றின் உள்ளமைந்த சிற்றம்பலத்தில் கூத்தப்பெருமான் காட்சியளிக்கிறான். இச் சிற்றம்பலமும் இதன் முன்னமைந்த பேரம்பலமுமே…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழி ஆக்குவதற்காக நீண்ட நெடுங்காலமாய்ப் பற்பல வகையிலும் போராடி வருகிறோம். ஆனால் நம் இலக்கை அடைய முடியவில்லை என்பது மட்டுமன்று. அது நம்மை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டுமிருக்கிறது. கல்விமொழி என்றால் முதற்பயில்மொழியும் ஒரே பயிற்றுமொழியும் என்று பொருள். பொதுவாக உலகில் ஒவ்வொரு தேசமும் அதனதன் தேசிய மொழியையே –…
சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 51. Abandonment of a child குழந்தையைக் கைவிட்டுவிடுகை பன்னிரண்டு அகவைக்குக் கீழுள்ள குழந்தையை அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் அந்தக் குழந்தையை விட்டு முற்றிலுமாக விலகிச்செல்லவேண்டும் என்னும் கருத்துடன் ஓரிடத்தில் விட்டுச்செல்லுகை அல்லது பாதுகாப்பின்றி விடுதல். குழந்தையைக் கைவிட்டுவிடுகை (பி.317, இ.த.தொ.ச.) 52. abandonment of copyright பதிப்புரிமையைக் கைவிடல் Copyright என்பது பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை. புத்தகத்தைப் பதிப்பித்து…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 : குறளகம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு – தொடர்ச்சி) பூங்கொடி குறளகம் புகுதல் புரக்குநர் இலோமெனப் புலம்புதல் கேட்டஅறத்து வழிப்படூஉம் நெஞ்சினன் ஒருவன்தாயினும் மேலாம் நோயுறும் தந்தைவீய்நிலை கண்டுளம் வெதும்பி இரங்கித்தோள்மிசைத் தழீஇத் தொண்டுளம் பூண்டவாழ்நாள் உடையார் மலையுறை யடிகள்தம்குறளகம் தனிலெமைக் கொண்டுய்த் தனனே; 80 மலையுறை அடிகள் மாண்பு குறள்நெறி வாழும் கொள்கையர், அறிஞர்ஒழுக்கம் உயிரென ஓம்பும் செம்மல்,வழுக்கியும் தீதுரை வழங்காப் பெரியார்;கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனக்கல்வி வளர்ந்திடக் கழகம் கண்டவர்; 85பல்வகை நூல்பயில் படிப்பகம் நிறுவியோர்கவிஞர் பலருயிர் காத்தருள்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2 – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 3/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 2/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா? பாதுகாப்பு…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 979-984
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 979-984 (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
இணையவழியில் ஆளுமையர் உரையும் என்னூல் திறனரங்கமும் – 17.12.2023 காலை
தமிழே விழி! தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 79 & 80 : இணைய அரங்கம் மார்கழி 01, 2054 / 17.12.2023 முற்பகல் 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ந்து முற்பகல் 11.00 | என்னூல் திறனரங்கம் 4 இலக்குவனார் திருவள்ளுவனின் முந்நூல் குறித்த இணையவழித்…
சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 31 –40 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 41. Abandoned கைவிடப்பட்ட கைவிடப்பட்ட குடும்ப உறுப்பினர், கைவிடப்பட்ட சொத்து, கைவிடப்பட்ட ஏரி, கைவிடப்பட்ட சுரங்கம், கைவிடப்பட்ட பணிகள் என்பன போன்று பாெறுப்பைத் துறக்கும் நிலை. 42. Abandoned child கைவிடப்பட்ட குழந்தை பெற்றோர்/உறவினர்/பாதுகாவலர்/பேணுநர் இன்றி விடப்படும் குழந்தை. அனாதை/உறவிலி/ஏதிலி எனக் குழந்தை மீது அவமுத்திரை குத்தக்கூடாது. எனவே, கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை அல்லது கேட்பாரற்ற குழந்தை எனக் குறிப்பிடுகின்றனர். இந்தியத் தண்டிப்புச்சட்டம், இந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.
(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை: தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன். என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி) நல்லுரை சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?” “வரவில்லை” “அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.” ‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’ அப்போது ஆறுமுகத்தா பிள்ளை…
