தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்

(தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.2) தோழர் தியாகு எழுதுகிறார் பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன் குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விசயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்சானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் இலெனின், மார்க்குசு போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. [அமீர்சான் வீட்டில்தான் காரல் மார்க்குசு படம் பார்த்தேன். “காட்டுக்கு ஒரு…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 :நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) தொடர்ச்சி) என் சுயசரிதை 17. மது விலக்குப் பிரசாரம் செய்தது எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புத்தகத்தில் 1895-ஆம் வருடம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்சு பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருந்துன்பம் அநுபவித்த விசயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாகக் காசு சம்பாதித்தாலொழிய எந்தச் சங்கத்தையும் சேரக்கூடாதெனத் தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருடம் நான்…

தோழர் தியாகு எழுதுகிறார் : நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்

(தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.1) நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகுநேர்காணல்: மினர்வா & நந்தன் [நக்குசலைட்டு வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘சமூகநீதி தமிழ்த் தேசம்’…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி) என் சரித்திரம் 37. எனக்குக் கிடைத்த பரிசு பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது…

தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம்

(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் நேற்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு அவர்களின் கீழ்வெண்மணி பற்றிய கட்டுரையை அன்பர் நலங்கிள்ளியின் தமிழாக்கத்தில் பகிர்ந்தேன். ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் திரும்பப் திரும்பப் படித்த போதும் சீர்மை செய்த போதும் இந்தக் கட்டுரையின் அருமையையும் சந்துரு அவர்களின் பெருமையையும் மீண்டும் புதிதாய் உணர்ந்தேன். தாழி அன்பர்கள் எதைப் படித்தாலும் படிக்கா விட்டாலும்…

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள்…

ஊரும் பேரும் 56 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இதிகாசமும் ஊர்ப் பெயரும்

(ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி) இதிகாசமும் ஊர்ப் பெயரும் பாரதமும் இராமாயணமும் திருவேட்களம் ஐவர் மலை லாடபுரம்இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது. அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர் என்றும் கருதப்படுகின்றன. அங்குள்ள இடிந்த கோட்டையை அவன் அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு, மேய்க்கும் இடையர்கள் இன்றும் அருச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச்…

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4

(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 3/4 – தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்.(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 4/4 “இந்தக் கால தாமதம் விசாரணை நீதிமன்றத்தில் புலனாய்வு ஆய்வாளரின் கவனத்துக்குக் குறிப்பாகக் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மையே. புலனாய்வு ஆய்வாளர் மேல்முறையீட்டில் வாதங்கள் நடைபெற்ற காலம் முழுதும் இந்த நீதிமன்றத்தில் இருந்த காரணத்தால், அவரிடம் மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கலந்தாலோசித்து, இந்த மிதமிஞ்சிய…

தமிழ் இணையம் 2023, மதுரை, நிறைவு விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம்,இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதே.உ.க.[RUSA] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்நிறைவு விழாகா்த்திகை 01, 2054 வெள்ளி 17.11.2023

தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம், இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்தொடக்க விழாஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 3/4

(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4 – தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்.(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 3/4 இந்த வழக்கில் முதல் எதிரியான கோபாலகிருட்டிண நாயுடு கையெழுத்திட்டு நெல் உற்பத்தியாளர் சங்கம் அனுப்பியதாகக் கருதப்படும் கடிதத்தை ஓர் ஆவணமாக வழக்கு விசாரணையின் போது அமர்வு நீதியர் முன்பு அரசு வழக்குரைஞரோ எதிர்த்தரப்பு வழக்குரைஞரோ அளிக்கவில்லை. இயல்பாக, சான்றாவணம் விசாரணை நீதிமன்றம் முன்பு…

தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்- தொடர்ச்சி) நெல்லைத் திருக்கோவில் பெருமை பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் நாட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில். ‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று…