தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை
(தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(ஆ) : மினர்வா & நந்தன் தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப் பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் ‘அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்’ என்றுதான் வழக்குப்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு -தொடர்ச்சி) 38. நான் கொடுத்த வரம் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறுமுகத்தா பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில் தங்கினோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாட் காலையில் பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார். சிவக்கொழுந்து தேசிகர் பெருமை பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் சாகை சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர்…
ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சிரீ அடை மொழி ஊர்ப்பெயர்கள்
(ஊரும் பேரும் 56 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இதிகாசமும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி) சிரீ (ஸ்ரீ) சத்திமுற்றம் திருவெண்டுறை மகாபலிபுரம் தென்காசி உத்தரகாஞ்சி மானாமதுரை; வடமதுரைபாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத் தோங்கக் கண்ட அந்நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை. மான வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற்று என்பர். சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது. திருஆலவாய் நல்லூர் மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய்…
தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.2.) கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு இஃது எல்லாராலும் முடிவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபித்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை – தொடர்ச்சி).. நெல்லைக் கோவிந்தர் நெல்லையப்பர் கருவறையைச் சார்ந்து வடபால் பள்ளிகொண்ட பரந்தாமனது கற்சிலையொன்று மிகப் பெரியதாக அமைந்துள்ளது. அவ்விடத்தை நெல்லைக் கோவிந்தர் சந்நிதி என்பர். தமிழ்நாட்டின் பழஞ் சமயங்கள் சைவம், வைணவம் என்ற இரண்டுமாகும். அவற்றுள் ஏற்றத்தாழ்வு காட்டும் இயல்பு நம்மவரிடம் இல்லை. அவரவர் பக்குவ நிலைக்கேற்பப் பின் பற்றி யொழுகும் சமயங்கள் அவை என்பதை வலி யுறுத்துவதுபோல் நெல்லையப்பரும் நெல்லைக் கோவிந்தரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்….
தோழர் தியாகு எழுதுகிறார் : இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி-தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(அ.1.) நேர்காணல்: மினர்வா & நந்தன் இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்குசலைட்டுகள் செயல்படுகிறார்கள் அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும் போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணிதிரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்? அஃது ஒரு கடினமான வேலைதான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு சிற்றூருக்குச் சென்று தங்கி விட முடியாது. ஊரில் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித்தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள்தான்…
சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10
சட்டச் சொற்கள் விளக்கம் 1- 10 1. A bill further to amend மேலும் திருத்துவதற்குரிய வரைவம். வரைவத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என்பதை இது குறிக்கிறது. Bill-சட்டமாக இயற்றப்படுவதற்காக அளிக்கப்படும் சட்ட முன்வடிவு. சட்ட வடிவு பெறுவதற்கு ஏற்பிற்காக அளிக்கப்படும், சேர்க்கை, திருத்தம், மாற்றம் முதலிய திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சட்ட வரைவு. சட்ட வரைவு என்றால் draft என்பதற்கும் bill என்பதற்கும் குழப்பம் வரலாம். எனவே, சட்ட வரைவம் > வரைவம் எனலாம். இந்திய…
தோழர் தியாகு எழுதுகிறார் : மா.இலெ.தான் சரி
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.4) தோழர் தியாகு எழுதுகிறார்மா.இலெ.தான் சரி இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி பெருகவாழ்ந்தான் ஊருக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா அந்த ஊரிலேயே தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும்…
பூங்கொடி 23 : காமங் கடந்தவள்
(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி) பூங்கொடி காமங் கடந்தவள் நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு; 115 சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம் 120 மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம்…
தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்- தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (1.3) தோழர் தியாகு எழுதுகிறார் ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா? அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி. சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம்தான் சோசலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாறம். நிலச் சீர்திருத்தம்தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத்து உருசியாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத்து உருசியாவில் எல்லாச் சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும்…
இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும் : இணைய உரையரங்கம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023 உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் கவியரங்கம்: தலைமை: பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 931- Executive Officer – ஆணையாளர் தற்காலம் செங்கோட்டை மிட்டாதார், திரு. எம். சுப்பிரமணியக் கரையாளர் ஆட்சித் தரும கருத்தராயும், தென்காசி, வக்கீல், திரு. டி.எசு சங்கரநாராயண பிள்ளை பி.ஏ.,…
