தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 2/4

(தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு ஈ – தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! 2/4 அதே நாளில், 44 பேர் இறப்பு தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது (30.11.1970). தீர்ப்பு வழங்கப்பட்ட போது, 23 எதிரிகளும் இருந்தனர். கீழ்வெண்மணியில் கோபாலகிருட்டிண நாயுடுவுக்கும் மற்ற 8 பேருக்கும் 10 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சட்ட விரோதக் கூடல், குற்றச்…

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – நீதியர் சந்துரு 1/4

(தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!-தொடர்ச்சி) சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…(தமிழாக்கம்: நலங்கிள்ளி) கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை!(கீழ்வெண்மணியில் 52 ஆண்டு முன்பு நடந்தது என்ன?) “நேற்று வரை நாங்கள் கொடுத்ததை வாங்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் இன்று எகிறுவது எப்படி?”வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கும் சாணிப் பால் – சவுக்கடிக்கும் செங்கொடிச் சங்கம் முடிவு கட்டிய பின்னர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஒரு நிலக்கிழாரின் பிதற்றலிலிருந்து எல்லாம் தொடங்கியது. உலகெங்கும் சமூகவியலர்கள் கீழ்வெண்மணிக் கொலைகள்…

பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன்

(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி) பூங்கொடி கொழுநன் ஆவேன் கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்    90 நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; உடன்படச் செய்க குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன்     95 களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்…

சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு – இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனம்: அமைச்சர்கள்மீது நடவடிக்கை: நீதிமன்றக் கண்ணோட்டம் தவறு சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி தாலின் பேசியதற்கும் அம்மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றதற்கும் கண்டனம் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அறியாப் பிள்ளைகள் தெரியாமல் பேசுகின்றனர் என்றும் கட்சிக் கண்ணோட்டத்தில் பழி தூற்றுகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். நீதிபதிகள் சிலரும் இந்த எண்ணத்தை எதிரொலிக்கலாம் என்றும் ஐயம் வந்தது.  அதை உண்மை என்று மெய்ப்பிக்கும்  வண்ணம்  மாண்பமை நீதிபதி  செயச்சந்திரன் கருத்து…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 916. Assignment Card – குறிப்புத்தாள் அட்டை 917. Assignment Chart – குறிப்பு விளக்க அட்டை பாடசாலை வேலை யாவற்றையும் தனிப்பயிற்சி மூலம் நடத்த முடியாது. போனாலும், வேலையின் பெரும் பாகத்தை இம்முறையின்…

தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!

(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்துபுதைகுழியில் உறங்குகிறார்! சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம். இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும்….

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 : நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. நாடகக் கலை … சிறுதொண்டுகள் (1) தொடர்ச்சி) என் சுய சரிதை நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) 13–3–49 விக்குடோரியா பொது அரங்கில் (Public Hall) இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. விக்குடோரியா பொது அரங்கில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது. 24-4-49, அன்று விக்குடோரியா பொது அரங்கில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஃகரி’யை…

தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்-தொடர்ச்சி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் திறந்த மடல் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு. என் கனிவான வணக்கத்தையும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினையும் ஏற்க வேண்டுகிறேன். உங்களுக்கிருக்கும் கடுமையான நேர நெருக்கடிக்கிடையே எனக்காகச் சில நிமையம் ஒதுக்கி, இந்தச் சுருக்கமான மடலைப் படிக்க வேண்டுகிறேன். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரிமுத்து-மகாலட்சுமி சாதியாணவக் கொலைக்கு நீதி கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் சென்ற 17/08/2023இல் நடைபெற்ற…

தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5) -தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் போராட்டக் களம் பெரியகுளத்தில் மகாலட்சுமி – மாரிமுத்து ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டு – குறிப்பாக இந்த உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை அட்டவணைச் சாதிகள் அட்டவணைப் பழங்குடிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியக் கோரி – ஆகட்டு திங்கள் 5ஆம் நாள் தொடங்கிய போராட்டம் இன்று வரை உறுதியாகத் தொடர்கிறது. இந்த இடைக்காலத்தில் நடந்துள்ள சில நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் – தொடர்ச்சி) என் சரித்திரம் 36. எல்லாம் புதுமை நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன் சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீடசை செய்யவும் கூடும்” என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப்…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5)

(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும். இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும்…