ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்
(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…
தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!
(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி) பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக்…
தமிழ் வளர்த்த நகரங்கள், அ. க. நவநீத கிருட்டிணன்- 2. தன்னேரிலாத தமிழ்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் – தொடர்ச்சி) தன்னேரிலாத தமிழ் பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர். கதிரவனும் கன்னித்தமிழும் கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி…
தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!
(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! இனிய அன்பர்களே! இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 10 களவொழுக்கத்தின்கண் மகளிருடன் விளையாட்டும் விழாவும் நீங்கிய வாழ்வு தலைவனுக்கு இல்லை என்பது இதன் பொருளாகும். பழந்தமிழில் மகளிர் விளையாட்டைக் குறித்த ஓரை என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் ஆடவர் மகளிர் எனும் இரு சாரார் விளையாட்டுக்குரிய பொதுச் சொல்லாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். மொழியியலில் சொற்பொருள் விரிதல் எனும் முறையாகும் இது. இவ்வாறு விளையாட்டைக் குறித்துநின்ற ஓரை என்ற தூய தமிழ்ச்சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தீய…
தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி) சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும். இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும்…
கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! யாராக இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றத் தெரியவேண்டும்; காலமறிந்து பணியாற்றத் தெரிய வேண்டும். இருப்பினும் மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துநருக்கு மிகவும் இன்றியமையாதனவாக இவை உள்ளன. அவற்றில் பங்கேற்குநருக்கு அவையறிதலும் தேவை. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 640) ஆளுமையில் சிறந்து விளங்க விழைவோர் திருவள்ளுவா் கூறும் வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, காலமறிதல் முதலியவற்றை நன்கறிந்து செயலாற்றுநராக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பவர்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி! தொடர்ச்சி) பாவலரேறு தொட்ட உயரம் இனிய அன்பர்களே! “என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறுஎவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!” அவர் இப்படித்தான் வாழ்ந்தார்! இப்படித்தான் இயங்கினார்! அவர்தாம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அவர்தம் எழுத்தைப் படித்தோர்க்கும் உரையைக் கேட்டோர்க்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது தூய தமிழ் நடைதான். தனித்தமிழ் சொல்லாட்சியில் அவரைப்…
பூங்கொடி 10 – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி
(பூங்கொடி 9 – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787 – 790 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 791.Crane – ஓந்தி Crane – ஓந்தி 792. Share speculators…
தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி!
(தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்- தொடர்ச்சி) வேலிக்கு வேலி! இனிய அன்பர்களே! போலீசு (POLICE) என்பதைத் தமிழில் காவல்துறை என்று மொழிபெயர்க்கிறோம். காவல்துறையின் பணி “மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலை உறுதிசெய்தல், குற்றத் தடுப்பு, குற்றத் தீர்வு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. POLICE என்ற சொல்லைச் சிலநேரம் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதுண்டு. அப்போது அதன் பொருளைச் சுருக்கி ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கண்காணித்தல்’ என்று வரும். யாரும் சட்டத்தை மீறாமல், குற்றம் செய்யாமல் கண்காணித்தல், குற்றம் நடந்து விட்டால்…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9 தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருசம் செப்டம்பர் மாதம் 10-ஆந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோசமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோசப்பட்டேன். இதற்குக் காரணம்…
