பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5அரண்மனை – அரசனும் அமைச்சனும்அறுசீர் விருத்தம் அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டேவாய்த்தநற் றேரங்கே நிறுத்திநீடிய புகழ்கொண்ட பாரிநிறுவிய தமிழ்மரபில் வந்தோய்கூடிய காதலரைக் கொன்றேகொடும்பழி ஏற்றிடலும் நன்றோதேடிய பெருமையெலாந் தீரத்திக்கெலாம் பழிவந்து சேரும் எண்சீர் விருத்தம் அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலேதடையேது மில்லைதமிழ்ப்புலவோர் நிலைகாக்கமறுப்பேது மில்லைஇமிழ்கடல்சூழ் புவியினுக்கேஉயிராவா னென்றேஇறையாகும் மன்னவரைச்சொன்னவரும் நல்லதமிழ்காத்த புலவர்தாம்அவ்வுரையுந் தீதோஅடிமரத்தை நுனியிருந்துவெட்டுதல்நன் றாமோஉமிழ்நீராய் மன்னர்குலம்வீழுமாயின்…
தோழர் தியாகு எழுதுகிறார் 110: புதிய அறிவாய்தங்கள்
(தோழர்தியாகுஎழுதுகிறார் 109 : ‘ஆளுநர்உரை’ – ஓர்ஊடுநோக்கு (3) தொடர்ச்சி) புதிய அறிவாய்தங்கள் இனிய அன்பர்களே! பெருந்தொற்றுக் காலத்தில் நான் முகநூல் இடுகைத் தொடராக எழுதிய நூல் – தமிழ்நாட்டில் திரவிட, தமிழ்த் தேசிய ஆளுமைகளிடையே வெடித்த அறிக்கைப் போரில் என் இடையீடு – ஈழம் மெய்ப்படும் – நீண்ட காலத் தாழ்வுக்குப் பின் அச்சேறி நூலாக வெளிவந்துள்ளது. பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற என்னுரைக்கு மறுப்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் எழுதிய நூல் திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? இந்நூலில் அவர் தேசிய இனச் சிக்கல்…
சான்றோர் பெருந்தகை மு.வ. – 3/3 : – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 3/3 “பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவற்றுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.” “மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.” “வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 109 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் 108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4) இலவு காத்த கிளியாகத் திமுக அரசு நலங்கிள்ளி எழுதுகிறார் ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715
(தமிழ்ச்சொல்லாக்கம் 704-708தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 709- 715 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 709. க.ப. சந்தோசம் – மகிழ்நன் (1934) மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்நூலிலே தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் பத்தாண்டுகளாக வெளியிடப் பெற்றுவரும் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் தாளிற்கு யான் இடையிடையே எழுதி…
தோழர் தியாகு எழுதுகிறார் 108: இசுலாமியர் தொடர்பான உரையாடல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது. நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69): சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்? நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 37 : சிதம்பர உடையார்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 21சிதம்பர உடையார் என் தந்தையார் களத்தூரில் நந்தன் சரித்திரம் நடத்தியபொழுது வந்து கேட்டவர்களுள் சிதம்பர உடையா ரென்பவர் ஒருவர். அவர் அவ்வூருக்கு வடபாலுள்ள மறவனத்த மென்னும் ஊரிலிருந்த பெரிய தனவான். சிவபக்தி மிக்கவர். எப்போதும் விபூதி, உருத்திராட்ச தாரணத்தோடே இருப்பார். ஏழைகள்பால் அன்பும் இரக்கமுமுடையவர். பிறருடைய கண்ணைக் கவரும் சிவந்த நிறத்தினர். அவருக்கு நான்கு குமாரர்களும் நான்கு குமாரிகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்காக நான்கு வீடுகள் ஒரு சிறகிலும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 107 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் 106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)– தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 107: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3) கண்டால் வரச் சொல்லுங்கள் – கல்விக் கொள்கையை! இனிய அன்பர்களே! ‘ஆளுநர் உரை’ தொடர்பாக எழுந்த சிக்கல் ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இந்திய வல்லரசியக் கொள்கைகளிலிருந்தும் விளைந்த ஒன்று என்பதுதான் நான் வலியுறுத்த முற்படும் செய்தி. தமிழ்நாட்டரசு எழுதிக் கொடுத்ததை இரவி உள்ளவாறே படித்திருந்தால் அதிலிருந்து அரசின் கொள்கைகள் தெரிய வரும். ஆகவே ‘ஆளுநர்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 – ஆட்பெயரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34 தொடர்ச்சி) ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் கீரன் பழந் தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலியபெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும்பழம் பெயருக்கு பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது.கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில்உண்டு. ஆதன் ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப்பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்றுகுறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்நாட்டிற் காணப்படும். கோடன் கோடன் என்னும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2) பொதுத்தேர்வு(நீட்டு ) விலக்கு: செய்வதறியாத் தவிப்பு நலங்கிள்ளி எழுதுகிறார் “தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது தலைமைக்கு எடுத்துக்காட்ட வேண்டும்” என்று (தாழி மடல் 71இல்) நீங்கள் சொல்வது எனக்கு உள்ளபடியே வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைதளப் பதிவுகளில் திமுக உயர் மட்டத் தலைவர்களிடமிருந்து சாதாரணத் தொண்டர்கள் வரை ஆங்கிலத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு…
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) பழந்தமிழ்’ – 39 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி வினைச்சொல் தன்மையை அடையுங்கால் காலம் காட்டும் உருபைப் பெறவேண்டியுள்ளன. பகுதியுடன் கால எழுத்தும் சேருங்கால் அவை இரண்டையும் பொருந்தச் செய்ய வேறொரு எழுத்தும் வேண்டப்படுகின்றது. நினை இறந்த காலத்தை அறிவிக்குங்கால் நினைந்து என்று உருப்பெறுகின்றது. த் இறந்த காலம் காட்டுவது. அதனைப் பகுதியுடன் இணைக்க ந் வேண்டியுள்ளது. ஆனால் எதிர்கால எழுத்தை இணைக்குங்கால் அதுவே இரட்டித்து விடுகின்றது. நினை+ப்+ப=நினைப்ப. முற்றுச் சொல்லாகுங்கால் அச்சொல் திணை,…
