தோழர் தியாகு எழுதுகிறார் 95 : பதிவுகள் தளத்தில் செவ்வி 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 94: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 2 அப்படியான நிலை வரும் போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் தனிநிலையை(‘எக்சுக்ளூசிவி’டியை)க் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்கத் தேசியவாதிகள் நினைப்பார்கள். இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முசுலீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகி வருகிறது….
சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 5/5 தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 1/3 வடார்க்காடு மாவட்டத்திவ் வாலாசா என்னும் ஊர் உளது. அவ்வூரின் அருகில் அழகுற வேலமலை நிமிர்ந்து நிற்கின்றது. வேலமலையின் அடிவாரத்தே வேலம் என்னும் எழிற் சிற்றுார் அமைந்துள்ளது. அச்சிற்றுாரே சிற்றுாரும் பேரூரும் தமிழ்கூறும் நல்லுலகும் ‘முவ’ என்ற இரண்டு எழுத்துக்களால் ஒருமுகமாக மாண்புடன் போற்றும் முனைவர்மு. வரதராசனார் அவர்களின் சொந்த ஊராகும். பிறப்புசொந்த ஊர் வேலம் என்றாலும், முனைவர் அவர்கள் பிறந்தது வடார்க்காடு மாவட்டத் திருப்பத்துார் ஆகும். 1912ஆம் ஆண்டிலே பிறந்த முனைவர் அவர்களின்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703
(தமிழ்ச்சொல்லாக்கம் 688-698 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 699. Artesian Well – தானாகவே தண்ணீர் வெளியேறும் கிணறு மகாமக வருடத்தில் நகரபரிபாலன சபையர் தண்ணிறைத்துச் சேறள்ளி மணலிட்டு வருகின்றனர். இவ்வருடம் ஒரு தீர்த்தத்தில் தானாகவே தண்ணீர் வெளியாகும் கிணறு (Artesian Well) உண்டாக்க முயன்றதில் பயன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 94 : பதிவுகள் தளத்தில் செவ்வி .1
(தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 1 உங்களில் தோழர் யமுனா இராசேந்திரனைப் பற்றி அறியாதவர்கள் இருத்தல் அரிதே.2000ஆம் ஆண்டு நான் இலண்டன் சென்றிருந்த போது அவர்தாம் என்னை ஐகேட்டு கல்லறைக்கு(Highgate Cemetery) அழைத்துச் சென்று “இதோ உங்களவர், போய்க் கொஞ்சுங்கள்”என்று காரல் மார்க்குசிடம் கொண்டுபோய் விட்டு சுட்டுத் தள்ளியவர். 2003ஆம் ஆண்டு யமுனா சென்னை வந்திருந்த போது என்னிடம் ஒரு நீண்ட செவ்வி கண்டார். இனிய நண்பர் விசுவும் துணைக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு
(தோழர் தியாகு எழுதுகிறார் 92 :மறதிச் சேற்றில் புதைந்து போகாமல் – தொடர்ச்சி) இறையூர் இழிவு இனிய அன்பர்களே! சிபி வினவுகிறார்: இறையூர் பட்டியலினத்தவர் பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வினைக் குறித்துத் தங்களின் கருத்தென்ன தோழர்? கண்டிக்கிறேன், வேதனைப்படுகிறேன், இந்த இழிசெயல் புரிந்த தமிழ்க் குமுகத்தில் நானும் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. திண்ணியம் கொடுமை பற்றியும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அந்த நேரத்தில் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரையை விரைவில் தாழியில்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 35: விவாகமுயற்சி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 34 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 20 விவாகமுயற்சி வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம் பிள்ளையும் அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள் ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர். சிதம்பரம் பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத் தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33. சான்றோரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி) சான்றோரும் ஊர்ப்பெயரும் தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார் நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 . சான்றோரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி) சான்றோரும் ஊர்ப்பெயரும் தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார் நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப்…
தோழர் தியாகு எழுதுகிறார் 92 : மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் இனிய அன்பர்களே! மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 37 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே (தொல்காப்பியம், மொழி-12) என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஆராய்ச்சி பொருந்தக் கூறியுள்ளார். மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டே மொழிகளை வகைப்படுத்தியுள்ள முறைமையும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி) இழிதொழில்புனிதமா? காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் அள்ளும் தொழிலாளி. ஒரு முறை அம்பேத்துகருடன் உரையாடும் போது காந்தி சொன்னார்: “அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.” அம்பேத்துகர்சொன்னார்: “இந்த…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்: 07.05.2023
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: சித்திரை 24, 2054 / ஞாயிறு / 07.05.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) “தமிழும் நானும்” – உரையாளர்கள்…
