தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3தொடர்ச்சி) 7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3 1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறித்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறித்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒளி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின் உயர்வே வாழ்வில் ஏற்றத்தைத் தரும்’ என்பதனை நயமுறப்…

         இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’   சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின்  தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர் ++…

தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 19.3 தொடர்ச்சி) காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும் கரியிருவளி(Carbon dioxide) முதலான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவியலர்களும் சூழலியர்களும் வலியுறுத்தத் தொடங்கி பல்லாண்டு கழிந்த பிறகுதான் உலகத் தலைவர்களுக்கு மெல்ல உறைக்கலாயிற்று. 1979இல்தான் சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா நகரில் காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் முதல் பெரிய மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு காற்று மண்டலத்தில் கரியளவு கிட்டத்தட்ட 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1997ஆம் ஆண்டு சப்பான் நாட்டு கியோட்டா நகரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 21. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22 4. குலமும் கோவும் தொடர்ச்சி அதியர்     தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும்….

தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார். “என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!” இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார் நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத்…

தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்

காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது  “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு…

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழியின் இரு நூல்கள் வெளியீடு (2023)

தமிழ்மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடு இலக்கிய மீளாய்வு நன்னூல் பதிப்பகம் பெரியார் பெருமை பெரிதே

தமிழ்ச்சொல்லாக்கம் 606-610

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 606. பட்சி சகுனம்              –              புற்குறி 607. அத்தினாபுரம்             –              குருநகர் நூல்        :               பெருமக்கள் கையறு நிலையும் –…

தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3)

ஏ. எம். கே. நினைவாக (3) (தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு)) காக்கி மனப்போக்கு பொன்னப்ப(நாடா)ர் நெல்லை மாவட்டத்துக்காரர். ஆயுள் சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில்தான் சில ஆண்டுகள் கழித்து முடித்தார். பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அடைக்கலமும் இருளாண்டியும் சிவலிங்கமும் மற்றவர்களும் அந்தச் சிறையிலிருந்து தப்பிச் சென்ற போது பொன்னப்ப (நாடா)ர் அங்குதான் இருந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் ஏதோ சிறைக் குற்றத்துக்காகத் திருச்சியிலிருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார். திருச்சி சிறையிலிருந்து தப்பிச்…

இராசேசுவரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை – நிகழ்வெண் 1

முனைவர் திருமதி இராசேசுவரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை தை 06, 2054 / 20.01.2023 வெள்ளி மாலை மதுரை  நேரம் 4.30 நிகழ்வெண் 1 தலைப்பு:  மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ஆளுமையர்:  மொழி பெயர்ப்பாளர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன் இணைப்பு : Join Zoom Meetinghttps://us05web.zoom.us/j/7863805032?pwd=VldGSXc2QmJNTG4rSXFPdEMxN2NSZz09அடையாள எண் : Meeting ID: 786 380 5032கடவுச்சொல் : Passcode: yTFm9q

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316

தை 06, 2054  / சனவரி 20, வெள்ளிக்கிழமை… இந்திய நேரம் மாலை 8:00 மணி.. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்  திசைக்கூடல் – 316 இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில்  தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான  “அறியப்பட வேண்டிய தமிழகம்”  நூல் திறனாய்வு – கலந்துரையாடல் நூல் திறனாய்வாளர்: திரு. இரா. முத்து கணேசு  முதுகலை வேதியியல் ஆசிரியர் நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி “அறியப்பட வேண்டிய தமிழகம்” –  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து…

சலகெருது நாள்-பழமை பேசி

சலகெருது நாள் பொங்கற்திருவிழா என்பது, காப்புக்கட்டு, கதிரவன் பொங்கல், ஊர்ப்பொங்கல், பெரிய நோன்பு, மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல், பாரிவேட்டை,வேடிக்கைநாள், மூக்கரசு, சலகெருதுநாள், பூப்பொங்கல், விடைநாள் என்பதாக அமைந்த ஒருவாரகாலத் திருவிழா.  காணும்பொங்கலன்று பொது இடங்களுக்குச் சென்று களித்திருந்து வருதல், உற்றார் உறவினரைக் கண்டுவருதல், சல்லிக்கட்டு காண்பதென்பதுதான் பொதுவாகப் பார்க்கப்படுகின்றவொன்று. ஆனால் அன்றைய நாளிலே, சேவற்கோச்சை, புறாப்பந்தயம், தகர் சமர் எனப்படுகின்ற கிடாமுட்டு, ரேக்ளாபந்தயம், முயல்வேட்டை, தேனெடுப்பு, வழுக்காம்பாறை, ஆற்றங்கரை, மலைமுகடு, காட்டுமுகடு போன்ற இடங்களிலே தின்பண்டங்களுடன் கூடிக் கதை பேசிக்களிக்கும் மூக்கரச்சும் இடம்…