ஆளுநராயினும் நா காக்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநராயினும் நா காக்க! வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 355) என்பதை உணர்ந்து பேச வேண்டியவர், தமிழ்நாடு என்னும் பெயரின் உண்மை வரலாறு அறியாமல் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார். “தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்….

தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?

(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி) துவாலு தெரியுமா உங்களுக்கு? துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர். நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை  எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600

( தமிழ்ச்சொல்லாக்கம் 585-596 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 597. வயோதிகர் – மூப்பாளர் நூல்   :           சீவகாருணிய ஒழுக்கம் (1927) நூலாசிரியர்         :           சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்…

தோழர் தியாகு எழுதுகிறார் 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 5 பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும் பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்: “புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.” [கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர்,…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2  காட்சி : 4 உதாரன் – அமுதவல்லி எண்சீர் விருத்தம் அமுதவல்லி :                      பாராண்ட                தமிழ்மன்னர்                                                 பணிந்து                  காத்த                                                 பைந்தமிழை            வளர்க்கின்ற                                                 புலவீர்           வாழ்க                                       சீரார்ந்த                   தளையென்றும்                                                 சிறப்பு           நல்கும்                                                 செவிக்கினிய  தொடையென்றும்                                                 அடிய                     ளந்து                                       நேராக           வகுத்தளித்த                                                 நெறியைச்                சொன்னீர்                                      …

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032) தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம் தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! இணைய உரையரங்கம்: மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் தாமரை முனைவர் இராச.கலைவாணி உரைச்சுடர் செல்வி ந.காருண்யா…

தோழர் தியாகு எழுதுகிறார் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 4 இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?   இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம். ‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 22

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 21 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 13தமிழும் சங்கீதமும் என் தகப்பனார் சொற்படி பள்ளிக்கூடத்திற் படிப்பதைவிட்டு வீட்டிலேயே படித்து வந்தேன். தெலுங்கு சமசுகிருதம் இரண்டும் என்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுவிட்டன. ஒன்றுக்கும் உதவாதவனாக நான் போகக் கூடாதென்ற கவலையினால் நான் ஏதேனும் சீவனத்துக் கேற்ற வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று என் தந்தையார் விரும்பினார். அரியிலூரில் இருந்த தில்லைக் கோவிந்தபிள்ளை என்பவரிடம் என்னை ஒப்பித்துக் கிராமக் கணக்கு வேலையைப் பயிலுவிக்கும்படி வேண்டிக்கொண்டார். நான் அவரிடமிருந்து அவர் சொன்னபடியே நடந்து கணக்கையும் கற்றுவந்தேன்;…

உலகோரின் பாங்கமை பகரல் – தொல்லூர் கிழான்

உலகோரின் பாங்கமை பகரல் நாடலல் நாடல் நலத்தது கெடுவல் தேடலல் தேடல் தீயனப் பதியல் பேணலல் பேணல் பேய்மை  தழாஅல் மாணல் மதித்தல் மாய்தல் விழைதல் அறமார் மனத்தது விழைஇ மண்மிசை திறமார் வினைபுரி திறலர் ஆஅதல் ஓங்குபுகழ் நிறுத்த உலகோர் பாங்கமைந் தாங்கு  பகரு மாறே! சொற்பொருள் விளக்கம் : நாடலல் நாடல்  = நாடல் அல் > நாடுதற்குரிய நல்லனவற்றை நாடாமல் அதற்குப் புறப்பானவற்றை நாடுதலால்  நலத்தது = நலமான அனைத்தும் கெடுவல் = கெட்டுப் போகும் தேடலல்  தேடல் >…

தமிழ்நாடும் மொழியும் 21: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 20 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 21 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும். முதல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 3 காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும் சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து. இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல்…

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

நாள் : மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை இடம் : இரமதா ஓட்டல், எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 600008 உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம் இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம் முதலாவது உதய காண்டம் முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு…