மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!– இலக்குவனார் திருவள்ளுவன்
மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க! ஒருதலைக்காதலால் அல்லது ஒருதலை விருப்பத்தால் கொலைகள் பல பெருகி வருகின்றன. காதலுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் காதலுக்காக மற்றவரின் உயிரை எடுக்கலாமா? எனக்குக் கிடைக்காத பெண் அல்லது சிறுபான்மை ஆண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசைப்படும் பொருளாகக் கருதி, மறு தரப்பாரை கழுத்தை அறுத்துக் கொல்வது, எரித்துக் கொல்வது, வேறு வகையில் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றிச் சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெருகி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 13
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 12 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே இலட்சுமி பாகீரதி, சரசுவதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோட்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின. மூன்றாம் பெண்ணாகிய சரசுவதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது…
தமிழ்நாடும் மொழியும் 11 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 10 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கல்வி முறை சங்கக்காலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான். ‘உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே………………………………………………………..அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்’ என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும்….
செய்தி அரசியல் – ஆணைய அறிக்கைகள்
தமிழ்த்தேசம் செய்தித் திறனாய்வு ஆணைய அறிக்கைகள் தோழர் தியாகு நெறியாளர்- தோழர் மகிழன்
தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்
தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார் தொல்காப்பியர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கண ஆசான்களுக்கு நிகராகப் பேசப்படுகின்ற சமகாலப் படைப்பாளர்;தமிழக அரசின் கபிலர் விருது பெற்ற தகைசால் பெரியவர்;இலக்கணப் படைப்பாளர்களுக்கும் நெய்தல் படைப்பாளர்களுக்கும் ஒப்பற்ற ஆசான்; கோடிமுனை மி.காசுமான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.கடந்த வாரம் அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு “பெருலின் உன்னிடம் சில விசயங்கள் பேசவேண்டும்; நேரில்தான் பேசவேண்டும். வரமுடியுமா? கட்டாயம் வரவேண்டும்” என்று கட்டளையிடுவதுபோல் பேசினார். நானும் “நிச்சயம் வருகிறேன் ஐயா” என்றேன். ஆனால் என்னால்…
1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!
1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது. ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில்…
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 கால நதியின் கதியதினில்கடவுள் ஆணை காண்பீரேல்ஞால மீது சுகமெல்லாம்நாளும் அடைந்து வாழ்வீரே! என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார். ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார். கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும் கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி சொல் பழம்பொருள் புதுப்பொருள் அகம் உள்,மனம் கருவம் அகலம் மார்பு இடத்தின் பரப்பு அவல் பள்ளம் தின்னும் அவல் இயம்புதல் ஒலித்தல் சொல்லுதல் கண்ணி அடையாள மாலை வலை கருவி தொகுதி ஆயுதம் கிழவன் உரியவன் முதியவன் கோடை மேல்காற்று வெயிற்காலம் சாறு திருவிழா …
உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 3. அறிஞர் பரிதிமாற்கலைஞர் பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் முடியரசன் ஆகியோர் பாடலடிகளுடன் அறிஞர் பரிதிமாற்கலைஞர் குறித்த கட்டுரையைத் தொடங்கியுள்ளார். இலக்கிய இலக்கண நாடக அறிஞரான பரிதிமாற்கலைஞர் தமிழே உயர்தனிச் செம்மொழியென்று நாளும் முழங்கியதோடு அமையாமல் அதற்குத் துறைதோறும் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தொடங்கி வைத்தார் என்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர். ஆசிரியர் மேற்கோளாகக் காட்டும் பரிதிமாற்கலைஞரின் வரிகள், அவரைத் தமிழாய்ந்த நற்றமிழறிஞராக நமக்குக்…
முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்: 10. முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! தமிழுக்குச் செய்ய வேண்டியவற்றை அரசு மட்டும் செய்தால் போதும் என மக்கள் வாளாவிருந்துவிடுகின்றனர். அரசுத் துறைகளோ தமிழ் வளர்ச்சித்துறையோ மட்டும் தமிழ் வளர்த்தால் போதும் என நாம் எண்ணுவது தவறாகும். மக்கள் குடும்பத்தில், வணிகத்தில், கல்வியில், அச்சகங்களில், அழைப்பிதழ்களில், மண்டபங்களில், கதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில், பிற விழாக்களில்,…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல் நிலம் தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், “வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்க ளாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப்பாக்கம், நுங்கம் பாக்கம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 75
(குறிஞ்சி மலர் 74 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப் படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும்…
