தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |(திவள்ளுவர், திருக்குறள் 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 06, 2053 ஞாயிறு 23.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார் சிம்மம் சத்தியபாமா அம்மையார் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30

(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி)   இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள்…

இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்! நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும்.  தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர்  மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது.  . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 486-492

(தமிழ்ச்சொல்லாக்கம்: 481-485 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 486-492 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 486. Hair Pin            –          தலைமயிர் ஊசி 487. Nail Brush        –          நகக்குச்சு 488. Mons Veniris –            அல்குலின் மேடு…

இராசராசன் என்ன மதம்? – தோழர் தியாகு

ஐப்பசி 02, 2053 / 19.10.2022 புதன் இரவு 7.00 தமிழ்நாடு இனி – தொடர் அரசியல் வகுப்பு 100 தோழர் தியாகு கூட்ட எண் 8641368094 கடவுச்சொல் 12345

உ.வே.சா.வின் என் சரித்திரம் 12

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 11 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) வாழ்நாள் முழுவதும் சிவ பூசையும் சபம் முதலிய கருமானுட்டானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகசுதர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருட்டிண சாசுதிரிகளென்பது. அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்;…

‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது

(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார்.           கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார்.          …

தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக…

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென–இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்–விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே–ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே–காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம். காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள்….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 481-485

(தமிழ்ச்சொல்லாக்கம்: 476-480 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 481-485 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 481. ஆபீசு – அரசாட்சி 482. Records – ஆதரவுகள் 483. Circular – சுற்றுத்தரவு இந்த மலை வழக்கை மலையினும் பெரிதென்று…

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! – புலவர் பழ.தமிழாளன்

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! 1. அருட்பே   ரொளியே  இறையெனக்                          கொண்ட   அருளகத்தார் / உருவ  வழிபா  டொழித்தசீர்   ஒப்பில்                                              ஒளிமுகத்தர் / கருவில்  திருவினைக்  கையகம்                            பெற்ற  கலைநிறைஞர் / அருட்பா  படைத்தே  அதன்வழி  வாவென்                                   (று)   அழைத்தனரே ! / 2. சாதி     சமயச்   சழக்கை   ஒழித்துச்                                               சமமெனவே / ஓதியும்  மக்களை  ஒன்று  படுத்திய                                             ஒண்மையராம் / வேதியர்  கூற்றை  விலக்கியே  வாழ்ந்த                                         நல்    வள்ளலவர் / ஏதிலார்  கண்டே …