புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25
(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம் 21. யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ. 22. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும் …
உ.வே.சா.வின் என் சரித்திரம் 11
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 10 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) “இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.” “அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருட்டிணையர். இந்த வார்த்தை…
புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து
புதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல் அணிந்துரை இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’. அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின் புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர். பக்கந்தோறும் பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 465-471
(தமிழ்ச்சொல்லாக்கம்: 461-464 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 465- 471 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 465. உயர்தர நியாய மன்று – சில்லாக் கோர்ட்(டு) 466. Appeal – அப்பில் மேல்வழக்கு 467. Preview Council –…
தமிழ்நாடும் மொழியும் 9 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 8 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார். பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது….
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 461-464
(தமிழ்ச்சொல்லாக்கம்: 453-460 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 461-464 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 461. சங்கீத வித்துவான்கள் – இசைப் புலவர்கள் தற்கால வழக்கிலுள்ள சுமார் 40 சாதாரண இராகங்களை இனங்கண்டு பெயர் சொல்லத் தெரிந்தவர். மேலும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன அல்ல; மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும். இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/ 12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
இந்திய மக்கள் முன்னணி(P.F.I.) தடை நீக்கக் கோரிப் போராட்டம்
புரட்டாசி 21, 2053 /8.10.2022 சனி மாலை 4.00 வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம் பாக்கம், சென்னை
பண்ணிசை விழா 2022, வட அமெரிக்காவில் இணைய வழியில்
புரட்டாசி 21, 2053 / 08.10.2022 தலைமையுரை: தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம் தொடர்ச்சி கேணி, கிணறு இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும். நிலம் இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம் என்ற ஊர்ப் பெயரிற்காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்குறிப்பதென்பர். புலம் …
