இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம். கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது. கடியென் கிளவி …
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார். ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை- தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்
தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சியே அச்சமூகத்தின் வளமையின் அளவீடு. அறிவு பெறும் வாயில் கல்வி. “கல்வி சிறந்த தமிழ் நாடு” எனும் சிறப்புக்குரிய தமிழ் நாட்டுக்கென, தமிழ் நாட்டரசு, தனித்த ஒரு கல்விக் கொள்கையை. உருவாக்கி வெளியிடுவது சிறப்புக்கு உரியது மட்டுமல்ல, தேவையுமாகும். தமிழ் நாட்டின் கல்விக் கொள்கைக்கென, தாய்த்தமிழ், தமிழ்வழிப் பள்ளிகளின் அமைப்பான, தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் சார்பில் பின்வரும்…
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி
‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 476-480
(தமிழ்ச்சொல்லாக்கம்: 472-475 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 476-480 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 476. பிரமாணம் – மேற்கோள் பிரிந்திருக்க வொண்ணாத இரு பொருள்களில் ஒன்றை உண்மையான நெறியில் ஆராய்ந்தறியப் புகுந்த இடத்தில் மற்றதையும் ஒருவாற்றேனும் அறியாதிருக்க…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல் நிலம் தமிழ் நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் “சோழ நாட்டுக் கடற்கரை, சோழ மண்டலக்கரை என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர் நாவில் சிதைந்து கோரமண்டல் கரையாயிற்று. பாண்டி நாட்டுக் கடலில் நினைப்பிற் கெட்டாத. நெடுங் காலமாக நல் முத்து விளைந்தமையால் . அக் கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக் கடற்கரை, மேல் கரை என்று பெயர் பெற்றது. கரை “கடற்கரையில்…
தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தங்கள் பொறுப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்பை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள். சிறப்பாகச் செயலாற்றி நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சி, தமிழின…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 74
(குறிஞ்சி மலர் 73 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி “அம்மா! இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கை கூட்டில் இடப்பட்ட குயில் முட்டையைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில்…
ஐ.நா.வின் தீர்மானம் – இந்தியாவின் நழுவல் – தோழர் தியாகு
விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! “விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா?” என நாம் கேட்டிருந்தோம். இதனை எழுப்பியதன் காரணம் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது என்பதால்தான். நான் 33 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள்ளேன்; விடுமுறை ஆணை ஒரு முறை கூடத் தமிழில் வந்ததில்லை. பின்னர் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்தாலும் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் அதற்கிணங்கத் தமிழில் விடுமுறை அறிவிக்கையை வெளியிட்டாலும் உடனே ஆங்கில அறிவிக்கை சுற்றுக்கு வந்து…
விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை. வரும் 2023 ஆம் ஆண்டின் பொதுவிடுமுறை நாள்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளது. நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. புத்தாண்டு நாள், பொங்கல், திருவள்ளுவர் நாள் முதலிய விவரங்களைத் தமிழில் தெரிவிக்க இயலவில்லையா? அல்லது கிழமைகளைத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? அல்லது தமிழில் கிழமைப்பெயர்கள் தெரியாதவர்கள்தான் செயலகத்தில் உள்ளனரா? அல்லது விடுமுறைப் பட்டியலில் தமிழில் கூற இயலாத அளவிற்கு அறிவியல் சொற்கள்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25
(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம் 21. யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ. 22. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும் …
