சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402
(தமிழ்ச்சொல்லாக்கம்: 384-395 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 396. வித்தியாரம்பம் செய்தல் – பள்ளிக்கூடத்தில் வைத்தல் கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விசயதசமியன்று அவர்களைப்…
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3
(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி) 1. மொழிபெயர்ப்புப் பணி சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு : “இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 384-395
(தமிழ்ச்சொல்லாக்கம்: 371-383 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 384-395 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 384. ஈமம் — சுடுகாடு 385. சந்தோசம் — உவப்பு 386. குங்குமம் — செந்தூள் 387. கிருபை — தண்ணளி 388….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி) 2. மொழிகளும் மொழிக்குடும்பங்களும் உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன; இன்றும் உயிருடன் வாழ்கின்றன. 1.செருமன்…
பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 13
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 12 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். ”வைசிய குலத் திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரசாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்விய சேத்திரத்தில் நடப்பதா?” என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறை யூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று சாதி குலம் என்ப தெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான்,…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது.32 பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்.33 சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது. தோப்பு மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும்.34 தோப்பின்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 67
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 66 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 தொடர்ச்சி “நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்” என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். “பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாள்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 371-383
(தமிழ்ச்சொல்லாக்கம்: 368-370 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 371-383 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 371. Legal Advice – புத்திமதி நியாயாதிபதி : பாரிசுடரே, நல்லது நீர் கைதியிருந்த கூட்டிற்குள் போவீர். பாரிசுடர் : ஐயா, எனக்குக் கைதியைத்…
இறந்தது நெல்லை இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி
இறந்தது நெல்லை இற்றதோ மனமே! இறந்தது நெல்லை இற்றதோ மனமே துறந்தது உடலை தூயரோ கண்ணன்; சற்றைப் போதில் சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே! சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன் பறித்தான் உயிரை! மேவிய புகழுடை மேதினிப் புலவ! நெல்லை கண்ணா நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில் அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச் சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை மிக்கா ரில்லை. தப்பே…
பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர். இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர். பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன….
இலக்குவனார் நடுநிலைப்பள்ளியுடன் இணைந்து நடைபெறும் சோழமண்டலச் சதுரங்கப் போட்டி
புரட்டாசி 01, 2053 ஞாயிறு 18.09.2022 காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நாகப்பட்டின மாவட்டச் சதுரங்கக்கழகம் வாய்மேடு இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் சோழமண்டலச் சதுரங்கப் போட்டி இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர்
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…
