இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்

பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர்,  பேராசிரியர்,  தமிழ் ஆய்வாளர்,   மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர்,  1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர்.  கவிஞர் இன்குலாப்,  முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 281- 288

(தமிழ்ச்சொல்லாக்கம்: 274-280 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 281-288 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 281- 288. தழுவுதல் 281. லதாவேட்டிதாலிங்கம்    —        கொடிபோலக் சுற்றித் தழுவுதல் 282. விருட்சாதிரூடாலிங்கனம்           —        மரத்தைப் போலேறித் தழுவுதல் 283. திலதண்டுலாலிங்கனம்   —        எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல் 284. சீர நீராலிங்கனம் —        பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல் 285. ஊருப்பிரகூடாலிங்கனம் —        தொடையால் நெருக்கித் தழுவுதல் 286. சகனோபசிலேசாலிங்கனம்         —        குறிகள் சேரத் தழுவுதல் 287. (இசு)தனாலிங்கணம்       —        கொங்கையழுந்தத் தழுவுதல் 288. (இ)லாலாடிகாலிங்கணம்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 274-280

(தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 274-280 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 274-280. பண்கள் 274. சட்சம்      —        குரல் 275. ரிசபம்     —        துத்தம் 276. காந்தாரம் —        கைக்கிளை 277. மத்திமம் —        உழை 278. பஞ்சம்    —        இளி 279. தைவதம் —        விளி 280. நிசாதம்    —        தாரம் நூல்      :           கொக்கோகம் (1910) பக்கம் -106 நூலாசிரியர்      :           அதிவீரராம பாண்டியன் உரையாசிரியர்  :           கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 5/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 4/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] அவர் செய்தது நம்பத் தகாதவற்றை நம்புவதா? நம்பும்படி நாட்டு மக்களை நிருப்பந்திப்பதா? இதைவிட நயவஞ்சகச் செயல் வேறொன்றுமில்லை. அந்த உலகமே வேண்டாமென்று இந்த உலகத்துக்கு வந்தார். வந்து கடவுள் முதற் கொண்டு கருப்பத் தடை வரைக்கும், காதலிலிருந்து விதவை மறுமணம் வரைக்கும், சுண்ணாம்பு இடிக்கிற பெண்ணின் பாட்டிலிருந்து…

தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடும் வழித்தோன்றல்கள் சிறப்பிக்கப்படலும்

தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடு ஆடி 01, 2053 / 17.07.2022ஞாயிறு மாலை 5.00 – இரவு 7.30 பீமாசு உணவுவிடுதிநூறடிச் சாலை, வடபழனி, சென்னை நூல் வெளியிட்டுச் சிறப்புரை:மாண்பமை கல்விக்கோ விசுவநாதன், வேந்தர், வே.தொ.ப.; நிறுவுநர், தமிழியக்கம்ஏற்பாடு: மறை.தாயுமானவன்தமிழியக்கமும் மறைலை அடிகள் கல்வி அறக்கட்டளையும் முழு விவரங்கட்கு அழைப்பிதழ் காண்க.

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 267 – 273

(தமிழ்ச்சொல்லாக்கம் 256-266 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 267. DEG – நீண்ட சதை மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த இராசகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்திரத்தில் புகுந்து மறைத்தாள். இதழ் :           இதழ் செந்தமிழ் (1910) தொகுதி – 8. பகுதி – 10 சாதாரண ௵ ஆவணி ௴ கட்டுரை     :           (இ)லெபன்னிசா கட்டுரையாசிரியர்        :           வீ. சுப்பிரமணிய…

ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1

(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும்‌ நிலமும்‌ தமிழகம் பழம்‌ பெருமை வாயந்த பாரதநாட்டின்‌ தென்பால்‌ விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர்‌ என்னும்‌ மூவேந்தரால்‌ தமிழகம்‌ தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர்‌. பொதுவுற தமிழகம்‌ நோக்கும்பொழுது பழந்‌ தமிழகத்தில்‌ மேல்நாடு சேரனுக்கும்‌, கீழ்நாடு சோழனுக்கும்‌, தென்னாடு பாண்டியனுக்கும்‌ உரியன வாயிருந்தன என்பது புலனாகும்‌. இங்ஙனம்‌ மூன்று கவடாய்‌ முளைத்தெழுந்த தமிழகம்‌ மூவேந்தரது ஆட்சியில்‌ தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால்‌ வகைப்பட்ட நிலங்கள்‌. தமிழகத்தில்‌ அமைந்‌திருக்கக்‌ கண்டனர்‌ பண்டைத்‌ தமிழர்‌.*2…

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…

அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!- இலக்குவனார் திருவள்ளுவன்

அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே! நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால்…

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! – பழ.தமிழாளன்

தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! 1. தமிழ்ப்பகை கால்வீழ்வான் நற்றமிழ                                                   னாகான் உமிழும்வாய்   எச்சி    உணர். 2. தன்மானம்   அற்றே    தகுசீர்  பகுத்த                                                 றியான் என்னிருந்தும்  இல்லானே  தேர். 3. ஈராயிரம்   ஆண்டின்    தமிழ்ப்பகை                                        கால்வீழ்வான் தேரான்   தெளிவில்லான்  தேர். 4. இனம்வீழ்த்த  எண்ணிடும்  ஆரியத்தின்                                                       தாளை மனமொப்பிச்  செல்வானே   மண். 5. நற்றமிழை   முற்றுமே   ஞாலத்                                           தழிப்பானைப் பற்றுவான்   என்றும்   பதர். 6. ஈன்றெடுத்த  தாயை  இழிவுசெய்வான்                                           கால்வீழ்வான் மாண்பில்   மகனாவன்   மன்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேன்வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின்றோரென்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சுஇளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.      — திருவருட்பா தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல்…