பேசின.. பேசின.. – மு. இராமச்சந்திரன்

பேசின.. பேசின.. அச்சமும் கவலையும் நோய்களும் பேசின அடிதடி கலகமும் வறுமையும்  பேசின மக்களும் பேசினர் மனத்தோடு அழுகையும் மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்.. வந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய்   வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய் கற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய் காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய் எல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும் இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய் நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய் நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய் அன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய் அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய் கொடுமைகள் கொடியேந்தி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 1/2 ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த…

காப்பியாற்றுப்படை – (உ)ருத்திரா

காப்பியாற்றுப்படை நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌வால் இயற்றிய வளைஇளம் நெற்றிகண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமைகாப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவிமலர் பொருது மற்று மண் பொருது இறங்கிபொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலைமுழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்காட்டி காட்டி மறைக்கும் மன்றிடைகள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்விளைதரும் என்று பலவு வீழ்த்த‌படப்பை…

ஏ, தாழ்ந்த தமிழகமே! – 4/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 3/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! 4/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] கற்பனைக் கொலை இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266

(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 256. விசித்திரம் – பேரழகு நூல்   :           அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) நூலாசிரியர்         :           கவித்தலம் துரைசாமி மூப்பனார். ★ 257. பிரசண்ட மாருதம் :           பெருங்காற்று (1909) இதழ் :           செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71 கட்டுரையாளர்    :           வீராசாமி ஐயங்கார் ★ 258. சந்திபாதம்    –           முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 259.அவதூதம்       –           புறங்கையாற் கீழே…

ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்

தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில்‌ இனிது நடாத்தி வரும்‌  அமைப்புகள்‌ பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த்‌ திகழ்வது ஒன்று. அது நூல்‌ என்பது. நூலின்‌ உள்ளுறை யாது? அறிவு. ஆதலின்‌, நூல் அமைப்பை அறிவுச்‌ சுரங்கம்‌ என்று கூறலாம்‌. நூல்கள்‌ பல திறம்‌. பல திறத்துள்‌ இரவியும் தனித்தும்‌ நிற்பது வரலாறு. வரலாறு வான்‌ போன்றது. வான்‌ மற்றப்‌ பூதங்களிற்‌ கலந்தும்‌, அவற்றைக்‌ கடந்து தனித்தும்‌ நிற்பதன்றோ? “ஊரும்‌ பேரும்‌” என்னும்‌ இந்‌ நூல்‌ வரலாற்றின்பாற்பட்டது. இவ்‌ வரலாறு தமிழ்‌ நாட்டின்‌…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி  சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள்…

தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு – க.பூரணச்சந்திரன்

தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 245 – 255

(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 245. அநுபந்தம்     –           பின்வருவது 246. அபிதானம்    –           பெயர் 247. அபிநயம்        –           கைமெய்காட்டல் 248. அவிழ்தம்       –           மருந்து 249. இலக்குமி       –           தாக்கணங்கு 250. இலக்கு            –           குறிப்பு 251. சுபாவம்          –           இயற்கை 252. கோமளம்       –           இளமை 253. சுதந்தரம்       –           உரிமை 254. திலகர் –          மேம்பட்டவர் 255. வருணாச்சிரமம்    –           சாதியொழுக்கம் நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்            3.     இனியசெந் தேனு மினியவான் பாலு                       மினியதீஞ் சுவைநிறைந் தியலும்                  கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங்                       கனிவரு முதலவின் பருப்பும்                  இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற்                       கினிமைநம் பாலிலை யென்று                  கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக்                       கைசெயுங் கனிதமிழ் மொழியே.            4.     உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக்                       குழறியுங் குழறியு…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! : 3/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 2/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! – 3/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புலவர்களுக்கே பழக்கம் ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு.வி.கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே…

தமிழன் பெட்பு – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு;        தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்;        அன்பே அவனுடை மொழியாகும்.       1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்;        அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே        பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.       2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்        கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்        புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.       3 “பத்தினி சாபம் பலித்துவிடும்“        பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச்        செய்தவன் துறவுடை…