தமிழ் மட்டும் தானே! – உருத்திரா

தமிழ் மட்டும் தானே! நம்பிக்கை கொள்! அது உன்னுள் ஆயிரம் யானைகள் பிளிறும் குரல்! அச்சம் அகற்று! அதுவே உன் விரல்நுனியில் ஒரு விடியல். உள்ளம் பிழிதல் தவிர்த்து விடு! அதுவே  வழியிடறும் பாறைகள் தவிடு பொடியாக்கும். இதயம் துடிக்கும் போது உணர்ச்சியை  இளக்கமாய் ஆக்கி இறுக்கமாய் உடுத்திக்கொள்! தளர்வுகள் ஏதும்  தலை காட்டாது ஓடும். சொற்கள் தோறும்  கற்கள் பிளந்து  உறுதியைக்காட்டு! இமயங்கள் கூடத் தன் மகுடங்கள் இழந்து மண்டியிடும் அறிவாய்! மனிதா!மனிதா! மந்திரம் சொல்லி உனை மடக்கும் மொழியை உடைக்கும் ஓரொலி…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244

(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 238. சுக்கிலம்        –           வெண்மை 239. கிருட்டிணம்   –           கருமை 240. பீதம்     –           பொன்மை 241. இரக்கதம்          –           செம்மை 242. அரிதம்            –           பசுமை 243. கபிலம்            –           புகைமை 244. இரத்தினம்    –           மணி நூல்   :           தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. நூலாசிரியர்         –            தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு. (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்

திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார் கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த, அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும் முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள் ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00 காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி நிகழ்விடம்: கோ இல்லம், எண்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்?…

இன்று  மகாராட்டிரம்,  நாளை  தமிழகமா? – பழ.தமிழாளன்

இன்று  மகாராட்டிரம்  நாளை  தமிழகமா? குடியாட்சி  மாண்பதனைக்  குப்புறவே            கவிழ்க்கின்ற  காட்சி  தன்னைக்     கொள்கையற்றே  ஒன்றியத்தை ஆளு        கின்ற ஆட்சியினர்  இற்றை நாளில் முடிமன்னர்  போலவுமே  மகாராட்டி         ரமாநிலத்தின்  ஆட்சி  தன்னை முற்றாக முடிப்பதற்கு  முனைப்போடு          செயல்புரியும்  காட்சி  காண்க அடிமையென  மக்களையே  ஆக்குகின்ற           ஆரியத்தின்  சூழ்ச்சி  தன்னை     அடல்மறவத்  தமிழினமே  அகமதிலே            பதியாதே  இருப்பார்  என்றால் விடிந்திருக்கும்  நிலைமாறி  விடியாத          இருள்சூழ்ந்த  நிலையே  ஒக்கும்      வெல்தமிழ  இனமெல்லாம்  விழிப்…

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எசு. நூல் வெளியீட்டு விழா ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00 உருசியக் கலாச்சார மையம் 74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை சென்னை மாலை 5.00 தேநீர் விருந்து நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ. தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி வாழ்த்துரை: திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் முனைவர் வி.பொன்ராசு, நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன் வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா நன்றியுரை: மரு.ப.இராசுகுமார் இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

அகில் இரிசி இராசசேகரனின் நூல் வெளியீட்டு விழா

அகில் இரிசி இராசசேகரனின் Rock Art of Madurai – The Pre History of Civilization நூல் வெளியீடு ஆனி 24, 2053 வெள்ளி 08.07.2022 மாலை 6.00  ‘பி’ தொகுதி கருத்தரங்கக் கூடம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை அன்புடன் நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர்

தமிழணங்கே!  தமிழணங்கே! – புதேரி தானப்பன்

தமிழணங்கே!  தமிழணங்கே! நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கேதமிழணங்கே உன்.சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே! இந்தப் பாடல் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டு பாடப்பட்டது. அவர், ‘மனோன்மணியம்’ என்னும் கவிதை வடிவிலான நாடக நூல் எழுதினார். அந்த நூலின் பாயிரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தாக இப் பாடலைப் பாடினார்.  அதன்பிறகு ஓரிருவர் கவிதை நடையில் நாடக நூல் எழுதினர்….

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237

(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908) பரலி ச. நெல்லையப்பர் 229. அஞ்சலி           –           கும்பிடல் 230. அதீதம்            –           எட்டாதது 231. அபிநயம்        –           கைமெய் காட்டல் 232. சம்மதம்          –           உடன்பாடு 233. சுதந்தரம்       –           உரிமை 234. கனிட்டர்        –           இளையவர் 235. நிருத்தம்        –           கூத்து 236. இரத்தம்          –           புண்ணீர் 237. விவாகம்         –           மணம் நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம்        21.   காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு                  சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்                  ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்                  காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.            22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே                  மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்                  புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்                  திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.            23.   ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்                 …

பரமக்குடிச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம்

பள்ளிக்கூடச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம் பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5  ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா. இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book…