ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1681-1690 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1676-1680 இன் தொடர்ச்சி) 1681. வாயு விசையியல் Aeromechanics 1682. வளிம அசைவியல்               Gas kinematics 1683. வளிம இயங்கியல்               Gas dynamics 1684. வளிம விசையியல்               Gas mechanics 1685. வாயுவெப்ப இயங்கியல்   Aerothermodynamics 1686. வளிமண்டல இயற்பியல்  Atmospheric Physics 1687. வளிமண்டல ஒலியியல்     Atmospheric Acoustics 1688. வளிமண்டல ஒளியியல்     Atmospheric Optics 1689. வளிமண்டலவியல்             Atmospherology 1690. வளிமவியல்              Pneumatics pneuma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்று. அழுத்தப்பட்ட வளிமம்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 91- 95

(தமிழ்ச்சொல்லாக்கம்  84-90 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 91. அக்கினி பாணம் – தீயம்பு நூல்        :              சிரீ பக்த லீலாமிர்தம் (1888) பக்கம் – 17 நூலாசிரியர்         :               தஞ்சை மாநகரம் இராசாராம் கோவிந்தராவு (குறிப்பு : இம்மொழிபெயர்ப்பு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  47

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  46 தொடர்ச்சி) “நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன். பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1676-1680 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1671 -1675இன் தொடர்ச்சி) 1676. வளர்ச்சி இயக்கவியல் Growth kinetics 1677. வளர்ச்சிஉளவியல் Developmental psychology 1678. வளர்ச்சியியல் Axiology ஐ வளர்ச்சியியல் என்கின்றனர். இது தவறு. Auxanology, Auxology என்பனவே வளர்ச்சியியல். Auxo- என்னும் இலத்தீன் முன்னொட்டின் பொருள் வளர்ச்சி. Auxology, இதன் மறு வழக்கான  Auxanology ஆகியவற்றின் பொருள் வளர்ச்சி யியல். Auxanology / Auxology 1679. வளர்சிதைமாற்றப் பொறியியல் Metabolic Engineering 1680. வளைசலியல்Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு…

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு  நடைபெற்றது. விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர்  மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 73

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 72 தொடர்ச்சி) அத்தியாயம் 27 தொடர்ச்சி அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 84-90

(தமிழ்ச்சொல்லாக்கம்  71 – 83தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 84. வியாபாரம் – தொழில் நூல்        :               சீவாத்துமா விசயமான ஒரு வியாசம் (1881) நூலாசிரியர்         :               பிரம்மோபா சி பக்கம் – 12. ★ 85. Telephone…

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1 தமிழ்நாட்டில் தமிழே எங்கும் திகழ அனைவரும் கருத்தூன்றிப் பணியாற்ற வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் தமிழ்த்துறையினர் பொறுப்பு இது என்று வாளா இருக்கின்றனர். மறு பகுதியினர், அரசின் வேலை இது என்று ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், அனைவருக்குமான கடமை இது என யாரும் உணரவில்லை. அதனால்தான் தமிழ் ஒருபுறம் தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டு உள்ளது; மறுபுறம் சிதைந்து தேய்ந்து கொண்டுள்ளது. தமிழே நம் தேசிய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி) 1671. வளைசப் பூவியல் Anthoecology 1672. வளைசப் பொருளியல் Ecological Economics 1673. வளைசப் பொறியியல்   Ecological Engineering 1674. வளைசலியல் Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப் படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள் விளக்கப்படி சரிதான். என்றாலும்   Bioecology / Bionomics என…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும் தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 71 – 83

(தமிழ்ச்சொல்லாக்கம்  57 – 70 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 71.          தேகச்சுமை         — உடற்பொறை 72.          பச்சிமம்                — மேற்றிசை 73.          புளினம் — மணல்மேடு 74.          மரணதினம்         — உலக்குநாள் 75.          மன்மதன்             — ஐங்கணைக்கிழவன்…

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…