தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்      – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை         வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது.          திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.      …

குவிகம் 100 அறிமுகம் : செந்தூரம் செகதீசு & இரம்யா வாசுதேவன்

குவிகம் இணைய அளவளாவல் கார்த்திகை 19, 2052 ஞாயிறு 5.12.2021 மாலை 6.30                   அறிமுகம் : செந்தூரம் செகதீசு                           இரம்யா வாசுதேவன்   இணையவழி அளவளாவல் நிகழ்வு  தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123   அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09                      

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 40

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 39. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 16 தொடர்ச்சி மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான். சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற…

தந்தை பெரியாரின் பொதுவான சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 24 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 25   4. பொதுவானவை சமூகம் பற்றிய சிந்தனைகளில் பொதுவான சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். (1) மதுவிலக்கு: (அ) மதுபானத்தால் பொருளாதாரக் கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையேயொழிய இயற்கையால் அல்ல. (ஆ) பொதுவாக மதுஅருந்துவதையே குற்றம் என்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாகும்படியானதும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் ‘மதுவிலக்கு’ என்பதேயொழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை. (இ) ஓர் இடத்தில் கடைகளை மூடிவிட்டு மற்ற இடத்திற்கு ஓடவிட்டு அவர்களை நாசமாக்குவதும்,…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம்  6 நிலவைப் பிடித்துச் – சிறுகறைகள் துடைத்துக் – குறுமுறுவல் பதிந்த முகம்,நினைவைப் பதித்து – மனஅலைகள் நிறைத்துச் – சிறுநளினம் தெளித்த விழி பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17   உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானைஅயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானைஉயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை       (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லைதென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானைதென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை    (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானைசென்னை தமிழருக்கே…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 39

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி…

முனைவர் இரெ. குமரனின் பிற நூலறிவையும் தரும் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் பா.சம்புலிங்கம்

திருக்குறள்–சிறப்புரை : முனைவர் இரெ. குமரன் முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின்…

ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி : மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 9   அத்தியாயம்  4. புதினத் தொடர்ச்சி   3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் புதினம் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனாரீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசாிப் பத்திாிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி பத்திாிகை குறிப்பிடத்தக்கது….

தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 23 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 24 3. சாதிக்கொள்கை தொடர்ச்சி (ஊ) சமுதாயத்தில் நலம் ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி, சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல. தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும் தன்னிச்சையாகவோ, சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச் சமுதாயத்தில் ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவிதச் சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 தொடர்ச்சி “நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள்….

என் கேள்விக்கென்ன பதில்:நடத்துநர்: இலதா இரகுநாதன்

கார்த்திகை 12, 2052 28.11.2021 ஞாயிறு மாலை 6.30குவிகம் இணையவழி அளவளாவல் கூட்ட எண்  /   Zoom  Meeting ID:  619 157 9931 கடவுச் சொல் /  passcode:                                     kuvikam123  அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib   பங்கேற்க முன்பதிவு தேவையில்லை6.15 மணியிலிருந்து பதிவும் அணிசேர்ப்பும் தொடங்கும்நம்குழல் youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38