அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…
தந்தை பெரியாரின் தலைவர்கள் குறித்த சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 26 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 27 5. தலைவர்கள் தலைவர்களின் தகுதிகளைப் பற்றி ஐயா அவர்கள் சிந்தித்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள். (1) ஒருதலைவன் வேண்டும், அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமேயொழிய நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பெயர். (2) மக்களை நடத்துகிறவன் தலைவனேயொழிய மக்களின் பின்னால் செல்லுகிறவன், மக்களை அடக்க முடியாதவன் தலைவன் அல்லன் தலைவன் ஆகவும் மாட்டான். (குறிப்பு 1) …
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 6 தொடர்ச்சி இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன்…
குவிகம் இலக்கிய வாசல்: சிறப்புரை: அ.கி.வரதராசன்
குவிகம் இலக்கிய வாசல்குவிகம் இணைய வழி அளவளாவல்கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021மாலை 6.30 சிரம் தள்ளிய சரம்சிறப்புரை : அ.கி.வரதராசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 – கடவுச்சொல் / passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib வலையொளி youtube இணைப்பு : https://bit.ly/3v2Lb38
புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம்
(முன் கட்டுரையின் தொடர்ச்சி) இராவண காவியம் கதைச்சுருக்கம் மிகப்பழங் காலத்தே தமிழ்நாடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன. குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப்…
ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 11 அத்தியாயம் 5. சிறுகதை சிறுகதை, கைத்தொழில் நாகரிகத்தில் நவீனப்பட்டுவரும் சமூகத்துக்குாிய ஒரு புதிய இலக்கிய வடிவமாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் மேலைத் தேசங்களில் தோன்றி வளர்ந்த இவ்விலக்கிய வடிவம், ஆங்கிலேயர்களின் தொடர்பினாலும் அவர்களின் ஆதிக்கத்தினாலும் நவீன மாற்றங்களுக்குள்ளாகி வந்த தமிழர் சமூகத்தில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றியது. 1920ஆம் ஆண்டுகளில் பாரதியார் மொழிபெயர்த்த தாகூாின் சிறுகதைகளும், மாதவையா, வா.வே.சு.ஐயர் ஆகியோாின் சிறுகதைகளுமே தமிழில் இவ்விலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்தன. 1930 ஆம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…
தந்தை பெரியாரின் பொதுவான சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 25 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 26 4. பொதுவானவை தொடர்ச்சி (7) இன்னஇன்ன கிரகம் இன்னஇன்ன வீட்டில் இருப்பதாலும், இன்னஇன்ன காலத்தில் இன்னஇன்ன கிரகங்கள் இன்னஇன்னகிரங்களைப் பார்ப்பதாலும் இந்தச் சாதகன் இன்னஇன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்தகாலம் கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன்சொல்வதாக வைத்துக்கொள்வோம். இவற்றுள் சாதகன் இன்னவேளையில் இன்னாரைக் கொன்று சிறைக்குப் போவான் என்று இருந்தால், அந்தக் கொல்லப்பட்டவன் சாதகத்திலும்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 6 தொடர்ச்சி “தரளம் மிடைந்து – ஒளிதவழக் குடைந்து – இருபவளம் பதித்த இதழ்முகிலைப் பிடித்துச் சிறுநெளியைக் கடைந்து – இருசெவியில் திரிந்த குழல்அமுதம் கடைந்து – சுவைஅளவிற் கலந்து – மதன்நுகரப் படைத்த எழில்“ படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக்…
சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 14 அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர் தமிழ்க்காதலன் முனைவர் அதிரடி அன்பழகன் நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா நிறைவுரை: தோழர் தியாகு அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
புலவர் குழந்தையின் இராவண காவியம் – பேரறிஞர் அண்ணாவின் முன்னுரை
இராவண காவியம் திராவிடத் தளபதி, திரு, சி. என். அண்ணாத்துரை எம்.ஏ.அவர்களின் முன்னுரை இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின்…
ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி:மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 10 அத்தியாயம் 4. புதினத் தொடர்ச்சி தமிழ் நாட்டுப் புதினங்களைவிட ஈழத்துத் தமிழ்ப் புதினங்கள் கூடியளவு சமூகச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் புதினங்களைத் தவறாமல் சான்று காட்டுவர். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க புதினங்களை எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புகள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுப் புதினங்களாகவே எழுதினார். இளங்கீரன் போல் இவரும் கருத்துகளுக்கே முதன்மை கொடுப்பர். அதனால் இவரது கதாபாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத்துகளின்…
