தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

நலமும் வளமும் நிறைந்துஉரிமை ஈழத்தை உயர்த்திநூறாண்டு கடந்தும் வாழியவே! தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்துநாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது: 1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு! 2. நான் பேச்சுக்குத் தருவதுகுறைந்தளவு முக்கியத்துவமே.செயலால் வளர்ந்த பின்புதான்நாம் பேசத் தொடங்க வேண்டும்! 3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தால்,ஒரு சாதாரண மனிதனால் கூடவரலாற்றை உருவாக்க முடியும். 4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. 5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால்,…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 16/17   இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்குநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானைநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினேதண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானைதாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை       (76)   தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறுகோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானைகோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானைசுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை       (77) ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயைஈங்கினிமேல் தலைமகளாய்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி   ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர்.  உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…

ஈழத்துப் புதின இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8   அத்தியாயம்  4. புதினம்    பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவையும் தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம்(நாவல்), சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…

இணைய அரங்கம் 13 : சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று!

தமிழே விழி !                                                                         தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 13 சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று! கார்த்திகை 12, 2052 ஞாயிறு 28.11.2021  காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி.வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: புலவர் அ. துரையரசி ‘கொள்கை மறவர்’ கடவூர் மணிமாறன் நன்றியுரை : செல்வி து.அழகுதரணி நிறைவுரை:  தோழர் தியாகு  அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்    

தந்தை பெரியாரின் சாதிக்கொள்கை தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 22 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 23 3. சாதிக்கொள்கை தொடர்ச்சி (ஙூ) பார்ப்பான் வந்து நமக்குத் திருமணம் செய்து வைப்பது சாத்திர விரோதமாகுமென்று சாத்திரமே கூறுகின்றது. இப்படித் திருமணம் மட்டுமல்ல; சாவுக்கும் வரக்கூடாது. இன்று நல்லகாரியமானாலும் கெட்ட காரியமானாலும் பார்ப்பான் வந்து சடங்கு நடத்திதான் வைக்கிறான். சாத்திரவிரோதத்தை நிவர்த்திக்கச் சிறிது நேரம் பூணூல் போட்டு மேல் சாதியாக்கிச் சில மந்திரத்தையும் சொல்லி நடத்தி வைத்து ஏமாற்றுகின்றனர். இன்று நடைபெற்றுவரும் செயல்கள் அனைத்திற்கும் பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் அன்று. அவர்கள் சூழ்ச்சியால்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 சோதியென்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையிதென்னே!      — பாரதி மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 15/17   இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரியதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானைதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானைஇல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை   (71) பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானைவிடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை       (72) வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானைபேசும்போதாங்கிலத்தில் பேசவேண்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 37

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என்…

ஈழத்துக் கவிதை முயற்சிகள், இதழ்கள், நூல்கள் -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7   அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி   2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….

குவிகம் இணையவழி அளவளாவல்

கார்த்திகை 05, 2052 / 21.11.2021 ஞாயிறு மாலை 6.30 எழுத்தாளர் சதுர்புசன் நேர்காணல் இந்திரநீலன் சுரேசு குவிகம் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  /   Zoom  Meeting ID:  619 157 9931 கடவுச் சொல் /  passcode:    kuvikam123     அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09