தமிழர் பொழுதுபோக்கு – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 22 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 23 12. பொழுதுபோக்கு திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும். உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது. ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது. எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற் பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே தனியாகப்…
பூதப்பாண்டியன் தேவியார் 2 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 20 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 19. தொடர்ச்சி) 5. பூதப்பாண்டியன் தேவியார் (தொடர்ச்சி) மேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செயலானும், அவ்வமையம் ஆண்டு உடனிருந்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, ‘சிறுநனி தமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே’ எனப்பாடியதனாலும் அதனை ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வியுமுடைய இருபெருமக்கள் காதலுனுங் காதலியுமாக அன்புபட்டியைந்த இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டற் கரிய தொன்றே. இதற்கு மிகவும் பிற்காலத்தே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான்…
பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி
பெருந்தலைச் சாத்தனார்: 1 : ந. சஞ்சீவி (சங்கக்காலச் சான்றோர்கள் 18: : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 19 3. பெருந்தலைச் சாத்தனார் ‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி’ நடக்கும் காவிரித்தாயின் கருணை வளம் கொழிக்கும் சோழ நன்னாட்டிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின்கண் மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்றோர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கணும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனாய்த் தோன்றினார் ஓர் அருந்தமிழ்ச்…
அமெரிக்காவில் தவழும் தென்றல் – மதுரபாரதி
ஆவணி 20,2052 ஞாயிறு 05.09.2021 மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் மதுரபாரதி சிறப்புரை: அமெரிக்காவில் தவழும் தென்றல் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையZoom Meeting ID: 619 157 9931Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம் .
தமிழர் நாகரிகம் (தொடர்ச்சி)–சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 22 11. நாகரிகம் (தொடர்ச்சி) அணிகலன்கள் அணிந்து கொள்வதில் ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்வு காட்டினர். தலைமுதல் கால் வரையில் அணியக்கூடிய அணிகலன்களைப் பெற்றிருந்தனர் (புறநானூறு-378). அணிகலன்கள் பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்யப்பட்டிருந்தன (குறிஞ்சிப் பாட்டு ). மணமகளுக்குத் தாலியணிதலும் அதனை ‘ஈகை யரிய இழையணி’(புறநானூறு-127) எனலும் உண்டு. மணமகன், மணமகளுக்குக் கையுறையாக அணிகலன்கள் அளித்தலும் அவற்றுள் காதலை அறிவிக்கும் அடையாளம் பொருந்திய மோதிரம்…
செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் சி. இலக்குவனார் நினைவேந்தல், திறன்பேசி உரை, 03.09.21
செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் சி. இலக்குவனார் நினைவேந்தல் ஆவணி 18, 2052 / 03.09.2021 மாலை 6.30 மணி முதல் சிறப்புரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் தளம் – சொற்கழகம் (Clubhouse) – தமிழர் மண்இணைப்பு – https://www.clubhouse.com/join/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/QHgk5CmL/m221ovz4 #தமிழர்மண் சொற்கழகம் (Clubhouse) திறன்பேசியில் பதிவிறக்கம் செய்ய இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=com.clubhouse.app பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து நிகழ்ச்சியின் இணைப்பைச் சொடுக்கினால் அரங்கிற்குள் நுழையலாம். கார்த்திகைச் செல்வன், தமிழர் மண்
பூதப்பாண்டியன் தேவியார் -இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 19 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 18. தொடர்ச்சி) 5. பூதப்பாண்டியன் தேவியார் இருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கெய்தி, அங்ஙனம் எய்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கும் நீங்காத நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழரசர் மூவருள்ளும், பாண்டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினும் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை யுடையர். இவரே முக்காலும் செந்தமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினோர். இவரே கவியரங்கேறினோர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 26
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 25. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 10 (தொடர்ச்சி) திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால்,…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர் வெ.அரங்கராசன் துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்; இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று: துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி, இன்பம் பயக்கும் வினை. [குறள்.669] பொருள்கோள் விரிவாக்கம்: துன்பம் உற வரினும், துணிவினை ஆற்றி, இன்பத்தைப் பயக்கும் வினையைச் செய்க. பொருள் உரை விரிவாக்கம்: ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது…
தமிழர் நாகரிகம்– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 20 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21 11. நாகரிகம் பண்பாடு அகத்தின் – உள்ளத்தின் – தொடர்புடையது. நாகரிகம் புறத்தின் பாற்பட்டது. உணவு, உடை, அணிகலன்கள், வசதி, வாய்ப்புகள், ஊர்தி, வீடு, நகர், வாழ்க்கைமுறை முதலியவற்றின் சிறப்பால் அறியப்படுவது. உள்ளச் சிறப்பால் உரையாலும், செயலாலும் பண்பாடு வெளிப்படும். செல்வச் செழிப்பால் நாகரிகம் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறும். பண்பாட்டால் நாகரிகம் மாற்றமுறுதலும், நாகரிகத்தால் பண்பாடு வெளிப்படுதலும் உண்டு. …
ஒளவையார்: 9 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 18 2. ஒளவையார் (தொடர்ச்சி) மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர்…
பாரி மகளிர் 2 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 18 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் (தொடர்ச்சி) இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய…
