அளவளாவல் – மரபுக்கவிஞர் தில்லை வேந்தன்
குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017பங்குனி 03, 2050 ஞாயிறு 17.03.2019 மாலை 4.00 மரபுக்கவிதைகள் பற்றிய அளவளாவல்:மரபுக்கவிஞர் தில்லை வேந்தன் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191
இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் தமிழைக்காக்கவும் பரப்பவும் பல வகைகளில் போராடித் தம் வாழ்க்கையைச் செலவிட்டவர். அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் தட்டிக் கேட்டும் செயல்பட்டதுடன் அரசிற்குத் தமிழ் வாழவும் தமிழர் வாழவும் மக்களாட்சி நிலைக்கவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்; வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். தம் கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவுகள் இதழ்கள் மூலம் அவ்வப்பொழுது தக்க நெறியுரைகளைத் துணிந்து வழங்குவதில் முதலாமவராகத் திகழ்ந்துள்ளார். அவர் கூறும் அறிவுரைகள் அரசுகளுக்கு மட்டுமல்ல. அரசை நடத்தும் கட்சிகளுக்கும் அரசாள எண்ணும் கட்சிகளுக்கும்தான். பேரா.இலக்குவனாரின்…
ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று – நன்னாடன்
ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று! அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும் கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும் சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும் சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும் பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும் காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும் மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும் மந்திரிக்கு நாமே மகத்துவ மூலிகையாய்க் காட்சியளிப்போம் தேர்தல் சந்தை முடியும் வரை விலையுள்ள பொருளாய் நாளும் வலம் வருவோம் திருவிழாவிற்குப் பின்னே மழிக்கப்பட்ட தலையாய் மாறிவிடுவோம்….
கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது
கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய…
உ.வே.சா. உலகத் தமிழர் விருது
உ.வே.சா. உலகத் தமிழர் விருது சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இம்முறை ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு‘ எனும் தலைப்பு வழங்கப்படுகிறது.இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.8.2019சிறந்த ஆய்வுரைக்கான தெரிவு அறிவிப்பு: 02.1.2020கவிக்கோ மன்றத்தில் விருது வழங்கும் நாள்: 22.2.2020
தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு: பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை: முனைவர் பி.(இ)யோகீசுவரன் அழைக்கும் அரசி பதிப்பகம்
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53 நூல் வெளியீடும் விருது வழங்கலும்: தோழர் இரா.நல்லகண்ணு விருது பெறுநர்: தொல்காப்பியர் விருது: முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா) திருவள்ளுவர் விருது: முனைவர் இ.எலியாசு இலக்குவனார் விருது: முனைவர் க.மலர்விழி கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர் புவலர் உ.தேவதாசு, செயலர் இலக்குவனார் இலக்கியப் பேரவை
சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்
[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல்…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 (குறள்நெறி) 31. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு! 32. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே! 33. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க! 34. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு! 35. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்! 36. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்! 37. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்! 38. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று! 39. அறத்தினை அன்றன்றே ஆற்று! 40. …
தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி
உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப் போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது. தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை,…
பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019
வைகாசி 12-14, 2050 / 26.05.2019-28.05.2019 பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி திண்டுக்கல் வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல் மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா இணையத் தோழி, இந்தியா பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019 அறிவிப்பு மடல் கருப்பொருள் தமிழ்மொழியின் பன்முகத்தன்மை துணைக் கருப்பொருள் தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,…
அளவளாவல் – மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன்
மாசி 26, 2050 ஞாயிறு 10.03.2019 மாலை 4.00 குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இலக்கிய வாசல் அளவளாவல் – தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன் தொடர்பிற்கு சுந்தரராசன் 94425 25191
