தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு
தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு! “ஈரோட்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை! தொகுதித் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாகவும் ம.தி.மு.க.விற்குரிய பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை எனில் உதய சூரியனில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. 19.03.2019 வெளிவந்த ‘அகரமுதல’ இதழின் இதழுரையில் ‘பாவம் வைகோ’ எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்….
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 (குறள்நெறி) நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு! அற வழியில் உண்மை இன்பம் அடை! அறம் செய்! பழிச்செயல் விடு! சார்ந்தோர்க்குத் துணையாக இரு! துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்! பிறருடன் உன்னையும் காத்திடு! பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்! இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி! இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்! முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன் (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு-கம்பதாசன்
இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு கவிஞர் கம்பதாசன் பங்குனி 08, 2050 வெள்ளிக்கிழமை22.03.2019 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : முனைவர் இராம. குருநாதன் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் சீவபாரதி கவிஞர் கம்பதாசன்பற்றிய சிறப்புரை : முனைவர் சொ. அருணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கவிஞர் மலர்மகன் தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி
ஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும். தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது…
சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்
சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர் திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின்…
தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! – கி.வேங்கடராமன்
மாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம்! “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும்…
பாவம் வைகோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
பாவம் வைகோ! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…
செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா? தமிழ் தொடர்பான துறைகள், பதவிகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றின் பொறுப்பிற்கான முதல் தகுதி தமிழறிவு இல்லாதவராக இருக்க வேண்டும். தமிழராக இல்லாமல் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி. இந்திய அளவிலும் மத்திய அரசு இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. எனவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பெறும் தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குறித்து நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை. இக்குழுவில் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். எப்படியோ…
‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு
பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 ‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு தலைவர்: முனைவர் பொற்கோ பெரியார் நூலக வாசகர் வட்டம் (குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ஆரியச்சிந்தனை ஓட்டம் இருப்பதாதகவும் அதை எதிர்ப்பதாகவும் இதன் மூலம் திருவள்ளுவரை எதிர்ப்பதாகவும் பொருள் ஆகிறது. இது நிகழ்ச்சி உணர்விற்கு எதிரானது…
திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்
திருக்குறள் சுட்டும் தீமைகள் முன்னுரை உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள் 1.குற்றம் கடிதல் (44) 2.கூடா நட்பு…
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம் ஆடுவதால் மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது. பல நல்ல தீர்ப்புகளை வழங்கும் நீதி மன்றங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உண்மையான ஆட்சிதான் அரசை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று எண்ணுவதில்லை. இவ்வாறான…
இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…
