இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…

அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!  

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த  ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.   சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…

இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014

வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,  பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்  நிகழ இருக்கிறது..  தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..)  ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​

மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) ௩௰ “உடையும் என் உள்ளம்” – தலைவன் -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண்…

“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா

    நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.