சப்பான் தமிழ்ச்சங்கத்தின் “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி

பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் இனிய வணங்கங்கள்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர்…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது

தாய்மை  இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…

தென்மார்க்கில் “மெல்லத் தமிழ் இனி” : கலைவிழா

புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணி   தென்மார்க்கில் புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணிக்குத் தொடங்கும் “மெல்லத் தமிழ் இனி” என்பதனை மையமாகக் கொண்ட மாபெரும் கலைவிழாவில் ஞானசேகரன் இணையர் தலைமை விருந்தினர்கள் ஆகவும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (4 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தற்பொழுது வதியிடம் இலண்டன்) பாரதி இலக்கியச் செல்வர் திரு. கருணானந்தராசா (யுகபாரதி – இலண்டன்) கவிஞர். திரு. பொன் புத்திசிகாமணி…

தனித் தமிழீழம் வேண்டும்!

தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…

நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து

    நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…

திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ?  உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.   ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…

வட அமெரிக்காவில் பெரியார் பிறந்த நாள் விழா

வட அமெரிக்காவில் வைக்கம் வீரர் தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழா பல்வேறு அமைப்புகள் பங்கு கொண்ட பயனுறு கருத்தரங்கம் பிரீமாண்டு, செப்.15 வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரீமாண்டு நகரில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கமாக ஆவணி 26, 2046 /செப்டம்பர் 12-ஆம்  நாள் சனிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பு,  அறிஞர் அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர்…

பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்

( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர்   மகா பாதகம்! ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை   கண்திறக்கவில்லை…