வண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே!

   நானிலத்தில் நற்றமிழ்த்தொண்டாற்றுவோர் நனிசிலரே உளர். அவர்களுள் ஒருவராக விளங்குபவர் இன்று பவளவிழா காணும் பைந்தமிழறிஞர் பா.வளனரசு ஆவார். எழுத்தால்,  பேச்சால், கற்பிப்பால், பதிப்பிப்பால், ஆற்றுப்படுத்தலால் என ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் தொண்டாற்றி ஒல்காப்புகழ் பெறும் உயரறிஞர் இவர்.   (தனித்)தமிழ் உணர்வைத் தாம் பெற்றதுடன் அல்லாமல் 45 ஆண்டுகாலக் கல்விப்பணியில் மாணாக்கர்களுக்கும் ஊட்டியவர். தனித்தமிழ் இலக்கியக்கழகத்தின் தலைவராகத் திகழ்ந்து   மக்களை நல்ல தமிழை நாடச்செய்யும் நாவலர் இவர்.  இதன் சார்பில்  1967 முதல் கட்டுரைப்போட்டி நடத்தி மாணவச்செல்வங்களை அயற்கலப்பில்லா தனித்தமிழ்த் திசைக்கண் ஆற்றுப்படுத்தும்…

தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

                எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்                 எண்ணுவம் என்பது இழுக்கு.   தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.   நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும்…

வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்

  பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள் கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.   ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற…

தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளிலும் தமிழைப்  பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர்.   சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது.   கல்லூரிப் புகுமுக…

தமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்.   மாணவர்கள்…

புகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்

  புகுமுக வகுப்புகளில் (Pre-University) ஆங்கிலத்தில் கற்பிக்குங்கால் – தமிழினும் –  பேச்சுத் தமிழினும் – கற்பிக்கலாம் எனப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகட்கு அறிவுரைக் குறிப்பு வந்துள்ளது. உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழிற் பயிலும் மாணவர்கள் கல்லூரிகட்குள் நுழைந்ததும் அயல்மொழியாம் ஆங்கிலத்தில் கற்பிப்பதை அறிந்த கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே கல்லூரிப்பாடமொழியும் தமிழ்தான் என்று சட்டம் செய்திருக்க வேண்டும்.   பி.ஏ. வகுப்புகளில் விரும்புவோர் கலைப்பாடங்களை(arts) தமிழிற்  படிக்கலாம் என்று கூறிவிட்டுத் …

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்க்கல்வி குறித்த இதழுரைகள்

பயிற்சிமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனாரும் தமிழ்க்கல்வி குறித்த அவரின் சில இதழுரைகளும்     தமிழ்ப் பாடக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, தமிழ்மொழிக் கல்வி குறித்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பேராசிரியர் எழுதிய இதழுரைகளில் சில இவ்விதழில் தரப்படுகின்றன. அன்றைக்குப் பள்ளிநிலையில் தமிழ்வழிக்கல்வி இரு்நதமையால் கல்லூரிகளில் தமிழ்க்கல்விக்காக அவர் போராடினார். அவரே, பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி வர இருப்பது குறித்து விழிப்புரையும் வழங்கினார்.  அவர் அஞ்சியவாறு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி பெருகிவிட்டது. இன்றைக்கு மேலும் இழிநிலையாக இருக்கின்ற தமிழ்வழிக்கல்விக்கு மூழுவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இச்சூழலில் அவரது இதழுரைகளைப்…

தமிழ் வழியாகப் படித்தல் – பிறப்புரிமை பேராசிரியர் சி.இலக்குவனார்

    தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும். ஆங்கிலேயரக்கு அடிமைப்பட்ட நம் நாட்டிலேயன்றி வேறு எங்கணும் வேற்று மொழியாகப் படிக்கும் இயற்கைக்கு மாறுபட்ட நிலையைக் காண இயலாது.   தமிழர் தமிழ் மொழி வாயிலாகப் படித்தலே தக்கது என்பதனை எல்லாரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆட்சியாளர்கள், பல்கலைக்கழகத்தினர், கல்லூரி நடத்துகின்றவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் தமிழ்வழியாகப் படித்தலைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் செயலில் காட்ட முன்வருவதற்கு அஞ்சுகின்றனர்.   தமிழ்வழியாகப் படிக்க வருவோர்க்கு உதவித்…

நாணுத்தக உடைத்தன்றோ? – பேராசிரியர் சி.இலக்குவனார்

  இளங்கலை வகுப்புக்களில் தமிழ் வழியாகப் படித்தற்கு  மாணவர்கள் முன்வரவில்லையாம். அதனால் தமிழ் வழியாகப் படிக்கும் திட்டத்தைச் சில கல்லூரிகளில் கைவிடப் போகின்றனராம். தமிழ்நாட்டில், தமிழர்கள் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள அரசில் தமிழ்வழியாகப் படிக்க மாணவர்கள் விரும்பவில்லையென்பது காணுங்காலை நாணுத்தகவுடைத்தன்றோ?   மாணவர்கள் ஏன் விரும்பிலர்? பள்ளியிறுதித் தேர்வு வரையில் தமிழ் வழியாகப் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சென்றவுடன் தமிழ் வழியாகப் படித்தலை வெறுப்பார்களா? மாணவர்கள் வெறுக்கவில்லை; அதனை விரும்புகின்றனர். அங்ஙனமாயின் தமிழ் வழிப் பயிலும் வகுப்புகளுக்கு அவர்கள் ஏன் சென்றிலர்?  தமிழ்நாட்டு அரசு,…

மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.

    மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும்  தமிழக முதல்வர்  (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர்  முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…

மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக

    சூன் 3 ஆம் நாள்  இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச்  சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.   மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.  எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…

நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!

  மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.   அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…