விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00    http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.  வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

கலைச்சொல் தெளிவோம்! 140 – 142 நோய் நுண்மி வெருளி-Bacillophobia; நோவு வெருளி Algophobia; வலி வெருளி-Odynophobia

  நோய் நுண்மி வெருளி-Bacillophobia; நோவு வெருளி Algophobia; வலி வெருளி-Odynophobia   நுண்(152), நுண்செயல்(1), நுண்ணிதின்(9), நுண்ணிது(1), நுண்ணியை(1), நுண்மைய(1), என்பன நுண்மை அடிப்படையிலான சங்கச் சொற்கள். நுண் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல்லே நுண்மி. நோய் நுண்மி வெருளி-Bacillophobia, Microbiophobia, Bacteriophobia உடல் வலி குறித்தும் உடல் வேதனை குறித்தும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் நோவு வெருளி – Algophobia/Agliophobia வலி வெருளி – Odynophobia/Odynephobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 139 நோய் வெருளி-Nosophobia

 நோய் வெருளி-Nosophobia   வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து (பரிபாடல் : 4:13) உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் (ஐங்குறுநூறு : 28: 1) நோயொடு பசி இகந்து ஒரீஇ, (பதிற்றுப்பத்து : 13: 27) நோய் தணி காதலர் வர, ஈண்டு (அகநானூறு : 22:20) நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! (புறநானூறு : 13: 9) இவை போல் நோய் (259), நோய்ப்பாலஃது (1), நோய்ப்பாலேன்(2), நோயியர்(1), நோயேம்(1), நோயை(2), நோலா(1), நோவ(30), நோவது…

கலைச்சொல் தெளிவோம்! 138 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia

 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia   நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப (திருமுருகு ஆற்றுப்படை :திருமுருகு ஆற்றுப்படை : 65) கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப (பொருநர் ஆற்றுப்படை : 98) நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு (முல்லைப் பாட்டு : : 81) அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின் (மதுரைக் காஞ்சி : : 472) அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து (குறிஞ்சிப் பாட்டு : : 211) நெஞ்ச(1), நெஞ்சத்த(1), நெஞ்சத்தவன்(1), நெஞ்சத்தன்(1),…

கலைச்சொல் தெளிவோம்! 129. தேனீ வெருளி-Apiphobia

தேனீ வெருளி-Apiphobia     தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை. எனினும் தேன்+ஈ தான் தேனீ. தேனீ பற்றிய இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia    – இலக்குவனார் திருவள்ளுவன்

தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி

  தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி – இலக்குவனார் திருவள்ளுவன்   படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்….

கலைச்சொல் தெளிவோம்! 134. நினைவிழப்பு வெருளி-Amnesiphobia

 நினைவிழப்பு வெருளி-Amnesiphobia   நினை (5), நினைஇ (7), நினைஇய(1), நினைக்க (1), நினைக்கல் (1), நினைக்குங்காலை (2), நினைக்கும் (1), நினைத்தல் (2), நினைத்தலின் (4), நினைத்திலை (1) நினைத்து (3), நினைத்தொறும் (3), நினைதல் (2)ஈ நினைதி (1), நினை திர் (1), நினைந்த (6), நினைந்தனம் (1), நினைந்தனிர் (1), நினைந்தனென்(1), நினைந்து(43), நினைப்ப(1), நினைப்பது (2), நினைப்பாள்(1), நினைப்பான்(1), நினைப்பின்(9), நினைப்பு(2), நினைபு(1), நினையின்(1), நினைய(1), நினையா(5), நினையாது(4), நினையாய் (2), நினையின்(3)நினையினர்(1), நினையினை(2), நினையுங்கால் (1), நினையுங்காலை,…

கலைச்சொல் தெளிவோம்! 132&133. நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia

நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia நடக்க (1), நடக்கல் (1), நடக்கும் (5), நடத்த (2), நடத்தல் (1). நடத்தி (1), நடத்திசின் (1), நடந்த (5), நடந்து (8), நடப்ப (1), நடலைப்பட்டு (1), நடவாது (1), நடவை (2), நடன் (1), நடான (1), நடை (119), நடைய (1), நடையர் (1), நடையோர் (1), நில் (6) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. நடப்பதற்கும் நிற்பதற்கும் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதுண்டு. இவையே நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia…

கலைச்சொல் தெளிவோம்! 131. நஞ்சு வெருளி-Iophobia

நஞ்சு வெருளி-Iophobia/Toxiphobia/Toxophobia/Toxicophobia நஞ்சு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் 4 இடங்களில் பயன்படு்த்தி உள்ளனர். நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; (நற்றிணை : 355.7) கவை மக நஞ்சு உண்டாஅங்கு (குறுந்தொகை : 324.6) நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை (கலித்தொகை : 74.8)            நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, (புறநானூறு : 37.1) பிறர் நஞ்சு கொடுத்துக் கொல்வார்களோ என எண்ணி ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய நஞ்சு வெருளி-Iophobia , Toxiphobia, Toxophobia, Toxicophobia…

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia    பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)  தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக்…

இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….