ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா?   காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…

கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்

தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 /  05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை  நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு :  நாஞ்சில் பீட்டர்

பகுபடைத்தலைவர் பால்ராசின் ‘சமர்க்கள நாயகன்’ நூல் அறிமுக விழா

  தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பகுபடைத்தலைவர் பால்ராசு  27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர். தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாகச் செயற்பட்டவர். இவரது நினைவுகளைச் சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீட்டுப்  பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியீடப்பட்ட நூல் …

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து   விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது.   தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…

தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?

  தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?   இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.  ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன்…