ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32- மகமதியரும் கிருத்துவரும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிருத்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர் மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31- குறுநில மன்னர்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 30. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31 குறுநில மன்னர் பாரி      தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான். அவ்வள்ளலுக்குரிய…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687

(தமிழ்ச்சொல்லாக்கம் 677-682  தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 683. Carbonic Acid gas — நச்சுக் காற்று நாமும் ஏனைச் சிற்றுயிர்களும் உட்கொள்ளும் உயிர்க்காற்று உள்ளே சென்றவுடன் அழுக்காகிப் பின் வெளிப்பட்டு விடுகின்றது. அப்போது அது நச்சுக் காற்றாய் (Carbonic Acid gas) மாறி விடும். இந்நச்சுக் காற்றையே திரும்பவும் நாம் உட்கொள்வமாயின் உடனே இறக்க வேண்டுவதுதான். நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 53 நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 – குலமும் கோவும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 29. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 4. குலமும் கோவும் தொடர்ச்சி சாமந்தர்     இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின் சிதைவாகும். இராசேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம் என்னும் ஊரும் அம் மன்னனால் உண்டாக்கப்பட்டதே…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 677-  682

(தமிழ்ச்சொல்லாக்கம் 671-676  தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 677. Food Machine – உணவுப் பொறி உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும். நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 55 நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை ★ 678. தயிலசத்து – பசையுடைப் பொருள்கள் அழலுண் பொருள்கள்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 28. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29 குலமும் கோவும் தொடர்ச்சி கங்கைகொண்ட சோழன்     இராசேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103 கடாரம் கொண்டான்     கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாசேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676

( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 671.  பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930) 1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார். பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670

( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 663. பிரதமை திதி               –              முதல்நாள் 664. துவிதியை திதி            –              இரண்டாம் நாள் 665. திரிதியை திதி              –              மூன்றாம் நாள் 666. சதுர்த்திய திதி             –              நான்காம் நாள் 667. பஞ்சமி திதி –              ஐந்தாம் நாள் 668. சசுட்டி திதி  –              ஆறாம் நாள் முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):27  4. குலமும் கோவும் தொடர்ச்சி சுந்தர சோழன்     அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு                             விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன்…

தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி)  சொல்லடிப்போம், வாங்க! (6) பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்: தோழர் வணக்கம். என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை. சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன. ‘சொல்லடிப்போம்’ வாங்க இரசித்துப் படிக்கிறேன். தாராளியம் சிறப்பான விளக்கம். நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள். நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன். பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல,…