ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):24

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):24 4. குலமும் கோவும் தொடர்ச்சி சிரீவல்லபன்      தென்பாண்டி நாட்டுக்குப் பெருந் தொண்டு செய்த பாண்டியன் சிரீவல்லபன் என்று கருண பரம்பரைக் கதை கூறுகின்றது. தாமிரவருணி யாற்றங்கரையில் உள்ள மணப்படை வீடு அம் மன்னனுக்குரிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கிற்றென்று தெரிகின்றது. அப் படை வீடு, சிரீவல்லபன் மங்கலம் என்ற ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்று சாசனம் கூறும். 35 அவ்வூரின் அருகே கொட்டாரம் என்னும் பெயருடைய சிற்றூர் காணப்படுகின்றது….

சுரதாவின் தமிழ்ச்சொல்லாக்கம் 621-638

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 616-620 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 621-638 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 621. ராசுட்டிரம் – நாடு   ஆந்திர சக்கரவர்த்திகள் காலத்தில் கர்மக ராசுட்டிரம் என்னும் ஒரு பூபாகம் ஆந்திர தேசத்தின் மத்தியில் சிறந்து விளங்கியது. இதுவே காலாந்தரத்தில் கம்மராசுட்டிரம் என்றாகிப் பின்னர் ’கம்ம நாடு’ என உச்சரிக்கப்பட்டதாகச் சிலசாசனங்களால் தெரிய வருகிறது. இக்கம்ம நாட்டை பரிபாலித்த ஆந்திர சக்கரவர்த்திகளுக்குப் பின் சோழர்களும், கடைசியாக முகமதியர்களும் அரசாண்டதாகச் சரித்திரங் கூறுகிறது. மேற்சொன்ன தமிழ் மன்னராகிய சோழர்கள் இம் மண்டலத்தைப் பரிபாலனஞ் செய்த பொழுதுதான் கர்மக…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 616-620

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 611-615 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 616-620 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 616. Stock – இருப்பு சில தினங்களுக்கெல்லாம் ஆத்திரேலியாவிலிருந்து சில வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளங்களை மூட்டை நான்கு சிலிங் முதல் பத்து சிலிங் வரை விலை ஏற்றிக் கொடுத்து வாங்கி விட்டார்கள். பிறகு சில தினங்களுக்கெல்லாம் மூட்டை இருபது சிலிங் வரை ஏற்றமாகி அந்தச் சமயமும் ஆத்திரேலியா வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளம் முழுவதும் வாங்கி விட்டார்கள். நான் மாத்திரம் விற்கவில்லை. பிறகு சில தினங்களுக்கெல்லாம் சோளம் விலையேறி மூட்டை முப்பது…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):23

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23 4. குலமும் கோவும் தொடர்ச்சி அழகிய பாண்டியன்       பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப் பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பெருட்டு அம் மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.24 சேந்தன்      ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 21. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22 4. குலமும் கோவும் தொடர்ச்சி அதியர்     தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும்….

தமிழ்ச்சொல்லாக்கம் 606-610

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 606. பட்சி சகுனம்              –              புற்குறி 607. அத்தினாபுரம்             –              குருநகர் நூல்        :               பெருமக்கள் கையறு நிலையும் –…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 20. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21  4.குலமும் கோவும்      பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன. நாகர்      நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.1 சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605

( தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 601. போசன பாத்திரம் –           பரிகலம் 602. அக்கினிச் சுவாலை         –           தீக்கொழுந்து நூல்   :           திருக்குற்றாலக் குறவஞ்சி…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 19. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20 வீர விருதுகள்     வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும்,குறுநில மன்னரும் அரிய வீரச் செயல்களால் அழியாப் புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன், ‘செய்யாற்று வென்றான்’ என்ற பட்டம் பெற்றான். அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், ‘பாலாற்று வென்றான்’ என்று பாராட்டப் பெற்றான்….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600

( தமிழ்ச்சொல்லாக்கம் 585-596 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 597. வயோதிகர் – மூப்பாளர் நூல்   :           சீவகாருணிய ஒழுக்கம் (1927) நூலாசிரியர்         :           சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்…

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் – இரா. திருமாவளவன், மலேசியா

மறை சொல்லும் மறுப்பும் மறைப்பும் எதிர்மறை நேர்மறை என மறையைச் சேர்த்து எழுதும் சொல்லும் வழக்கைச் சிலர் ஆள்கின்றனர்.  இவற்றுள் நேர்மறை எனச் சொல்வது சரியா? சரியா பிழையா என அறிய, மறையில் மறைந்துள்ள நுட்பப் பொருளை அறிந்தால் கட்டாயம் தெளிவுறும்.. எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு வேர்ச்சொல் விளக்கமேயாகும்… உல் எனும் ஊகாரச் சுட்டு ஆணிவேர், பல்வகைக் கருத்துகளைத் தந்து சொற்களைப் பிறப்பிக்கும் என்பது பாவாணரின் கோட்பாட்டு விளக்கமாகும். அக்கருத்துகளில் ஒன்றே வளைவுக் கருத்தாகும். பாவாணர் வித்தினின்று முளைவிட்டு கிளம்பிய ஆணிவேரின் நகர்ச்சியை அடிப்படையாகக்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19  கிடங்கில்      அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன்  என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து…