தமிழா விழித்தெழு! – ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்

“தமிழ் மொழி விடுதலையே உலக மொழிகளின் விடுதலை” “தமிழ் மொழியின் மறு மலர்ச்சியே உலக ஆன்மீக மறுமலர்ச்சி” “தமிழ் மொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள வளர்ச்சி” “தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின் விடுதலை” :”தமிழின விழிச்சியே உலகச் சகோதரத்தத்துவ விழிச்சி” “தமிழின எழுச்சியே உலக மானுட உரிமை எழுச்சி” “தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி” “தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை” “தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி” “தமிழர் மத எழுச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”…

தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி

தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்

செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல்   செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும்.  என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார்.   தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…

உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா

  சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…

வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…

தாய்த்தமிழும் மலையாளமும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 2 கி.பி. 1860-இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம்    நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.[1] இந் நூலால்அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர் .[2]                மலையாள மொழிபற்றி அறிஞர் கால்டுவல் கூறும் கருத்துகள்…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 3: மறைமலை இலக்குவனார்

(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி) பாடல் பெற்ற பல்வேறு ஒலிகள் அருவி ஒலி இயற்கையொலிகளில் அருவி ஒலியை மிகப் பெரிதும் சங்கச் சான்றோர் போற்றியுள்ளமைக்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. ‘பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப’18 எனவும்‘அருவி விடரகத்து இயம்பும் நாட’19 எனவும் அதன் ஆரவாரத்தையும்“ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்”20 எனவும் ‘ஒல்லென விழிதரு மருவி’21எனவும் அதன் ஒலிச்சிறப்பையும் பதிவுசெய்துள்ளனர். ‘இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவி’22என்று அருவியின் ஓசையை ஓர் இசைக்கருவியோசையாகவே அவர்தம் செவிகள் நுகர்ந்துள்ளன.’வயங்குவெள் அருவி…

அறிவுக் கோயில் ஞானாலயாவிற்குச் சென்றோம்! – கரந்தை செயக்குமார்

ஞானாலயா   புதுக்கோட்டையில் ஓர் அறிவாலயம் – ஞானாலயா: கரந்தை செயக்குமார்   கிருட்டிணமூர்த்தி நூல்களின் காதலர்ஆகி ஞானாலயா அமைக்கக் காரணமாக இருந்தவர் அவர் தந்தையே!   “மூல நூல்களைப் படி” என்ற இவர் தந்தை அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை 19 அகவயைிலிருந்த இவரிடம் கொடுத்தார்; இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி. என்றார்.   இவர் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய்த் தொட்டுப் பார்க்கிறார்.   நூறு…

மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா

  பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880 தி.ஆ. 2046        ஆடவை ( ஆனி )  13          28–06–2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.        கடந்த  22ஆம் நாள்  உங்கள்  புகழுரையை  மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே  ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது  ” உன்னை  அறிவாளி  யாரேனும்  பாராட்டும்போது  உடனே ” ஆம்  நான் அறிவாளிதான் ” என்று ஒப்புக் கொள்.  காரணம்  அந்தப்…

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை! அனைவருக்கும் இனிய வணக்கங்கள். சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான  (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியாகும். இந்தப்பள்ளியில் நம்முடைய தமிழ்ப்பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள் மேலும் கவாசாகி நகரிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நம்முடைய தமிழ்ச்சொந்தங்கள்…

தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்த்தமிழும் மலையாளமும் 1   தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும்…

கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்

கருகும் பிஞ்சுகள்  பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…