வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!

வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு! அன்புசால் தமிழார்வலர்களே! வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான்  ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…

மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்

பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019 தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்  பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின் 110ஆவது பிறந்தநாளாகும். இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ்…

பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – கி. வேங்கடராமன்

ஓகக் கல்வி(யோகா) என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை! கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’யின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில அயிரைப்பேரடி(கிலோ மீட்டர்கள்) தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி…

உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666) உலகத் தமிழ் நாள் கட்டுரைப் போட்டி 30 பரிசுகள் தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். விவரம் வருமாறு: தலைப்பு:  உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்! தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும்,   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும்  இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு. மாநாடு நடைபெறும் நாள் : மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020. மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு. மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநாட்டின்…

1 9 10 11 43