புதின இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை,  புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன்.   இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த புதினங்கள், தமிழ்ப்புதினத்தின் சமகாலப் போக்குகள், தசுதாயெவ்சுகியின்  புதினங்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன்  புதினம் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும்…

வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி

  அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…

13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு

13 ஆவது தமிழ் இணைய மாநாடு கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான அறிவிப்பு    உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது  தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21  நாள்களில்  நடைபெற உள்ளன.   புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன்  இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது.        2014 மாநாட்டிற்குத்…

தனித்தமிழ் பேசுவோம்!

தாய்த்தமிழ் காத்துயர்வோம்! மக்களால் பேசப்படும் மொழியே வாழும்! நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக்…

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான்  வரையறுக்க வேண்டும் – கலாநிதி இராம் சிவலிங்கம்   அணையாமல் இருக்க  காற்றோடு  போராடுவதை வாழ்வாகக் கொண்ட  மெழுகுவர்த்தி போல்,  ஈழம்வாழ்  எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து  தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா? எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள்…

திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு

என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான்  தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்

இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும்   சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு [Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing] 05.05.14 – 30.05.14  எனும் ஒருமாதக்காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் திஇராநி (எசுஆர்எம்) பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.   கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்….

மே முதல் நாளை பாரதிதாசனார் நினைவுநாளாகக் கொண்டாடுவீர்! நாவலர் வேண்டுகோள்:

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்கை எய்தினார்; மறைந்துவிட்டார்! அவருடைய எடுப்பான தோற்றத்தை இனிக் காண முடியாது! செஞ்சொற் கவிதை இன்ப ஊற்று அவரது எழுதுகோலிலிருந்து இனி பீரிட்டெழும்போது; அவர் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டார் & என்பதையெல்லாம் எண்ணவே நெஞ்சம் கூசுகிற; சொல்ல நா தழுதழுக்கிறது!   தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் தமிழ்க் கவிஞரெனத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழகத்திற்கு குறிப்பாக கவிஞர் கவிஞர் உலகிற்கு ஈடு…