குறள்மலைச்சங்கத்தின் முதல் குறள்கல்வெட்டு திறப்பு, மலையப்பாளையம்

வணக்கம். பேரன்புடையீர்! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று  குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக முதல் குறள் மலைமீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து,  ஆனி 19, 2047 /  2016 சூலை 3 ஆம்  நாளன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.  குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.சி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம்…

‘ழகரம்’ சிற்றிலக்கியத் தமிழ் இதழ் வெளியீடு

   வணக்கம். ‘ழகரம்’  சிற்றிலக்கியத் தமிழ் இதழ்  ஆனி 05, 2047  / சூன் 19, 2016  ஆம் நாள் மாலை 4 மணிக்கு  மார்க்கம் மக்கள் மையத்தில்  வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!

முன்னாள் பெண் போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!   முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாமின் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் ஆனி 11, 2047 / சூன் 25, 2016  ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.  

முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை

 ஆனி 07, 2047 /  சூன் 21, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு நூல் வெளியீடு

திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு – எழுத்தாளர் ஓவியா

ஆனி 02, 2047 / சூன் 16, 2016 பெரியார் நூலக வாசகர் வட்டம்,சென்னை திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு பொழிவு 4    

திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம்

  திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம் ஆனி 05, 2047 / சூன் 19, 2016 சிறப்புப்பொழிவு : தொல்காப்பியச் சான்றோர்  பேரா. இ.சூசை தலைப்பு  : தொல்காப்பிய வாழ்வியல்

அ.இ.த.எ.சங்கம் : இலக்கிய உறவுகள் திருவிழா, சென்னை

     மலேசியாவிலிருந்து வருகை புரிந்துள்ள ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் திரு. க. அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு மன்னர் மன்னன் மருதை அவர்களுக்கும் வைகாசி 31, 2047 / 13.06.16 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறோம்.   ஆதிரை முல்லை