தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி
தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி – இலக்குவனார் திருவள்ளுவன் படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்….
இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!
மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்! நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….
எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!
எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க! காலங்கள்தோறும் தமிழுக்குக் கேடு செய்வோர் இருந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், இப்பொழுது இணைய வசதிகளையும் ஊடக வாய்ப்புகளையும்கொண்டு அழிப்புப்பணிகளை விரைவாகச் செய்து வருகின்றனர். தமிழ்க்காப்பு உணர்வாளர்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். மற்றொரு சாரார் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வீர உரையாற்றினால் போதும் என வாளாஉள்ளனர். சிலரே எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உலகத் தமிழன்பர்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தாக…
செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!
செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்! செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். . இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…
தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!
குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா? இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும். கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…
வருமானவரித்துறையை மூடுக!
பெரும்பான்மையருக்கு உதவாத மத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை 2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளும் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!
நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி! கடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர்….
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!
தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி! தேர்வு முறையில் நடுநிலையைப் பின்பற்றுக! மக்கள் தொலைக்காட்சி நீங்கலான தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்க்கொலையையே தொழிலாகக் கொண்டுள்ளன. சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கதைத் தொடரை ஒளிபரப்பாமல் பண்பாட்டுக் கொலைபுரியாமல் தொண்டு புரிகின்றன. அவ்வாறிருக்க விசய் தொலைக்காட்சி – அதுவும் சீ சீ என்பதுபோல் பெயருக்குப்பின்னர் பாட்டியம்மா சொல்வதும் முதல் எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடும் தொகுப்பாளரும் அவ்வாறே சொல்லத் தொடங்கியுள்ளதும் பாடல்நிகழ்ச்சிகளில்கூட சாங்கு, சிங்கர், சூப்பர் போன்று ஆங்கிலச் சொற்களைக் கூறுவதையே கடமையாகக் கொண்டுள்ளதுமான விசய் தொலைக்காட்சி –…
மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா
தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல! இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல் தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…
‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா?
‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா? விளம்பரக்கூத்திற்கா? தூய்மையே நம் செல்வம். எனவே, இந்தியாவைத் தூய்மையாக்குவோம் என்னும் திட்டம் என்னும் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளால் இந்தியா தூய்மையாகிவிடுமா? ஆனால் அப்படித்தான் மத்திய அமைச்சர்கள் எண்ணுகிறார்கள். உழவாரப்பணி போன்று தூய்மைத் திட்டத்தில், தொண்டு மனப்பான்மையில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்கள் தத்தம் கடமையைஆற்றப் பணிக்க வேண்டும். மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் தூய்மை பேணப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….
